top of page
Search

போபாலில் மோடி பேச்சுக்கு வலுக்கிறதா எதிர்ப்பு! கர்நாடகைவைப் போல் ம.பி.யிலும் கரைகிறதா பா.ஜ.க!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 28, 2023
  • 3 min read
ree

பத்திரிக்கையாளர் ராஜா.



போபாலில் மோடி பேச்சுக்கு வலுக்கிறதா எதிர்ப்பு! கர்நாடகைவைப் போல் ம.பி.யிலும் கரைகிறதா பா.ஜ.க!!


மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபாடி ரயில் நிலையத்தில் இருந்து 5 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 27) கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர், போபாலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டு

பேசிய பிரதமர் மோடி, !


”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவு மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் உடன் ஒத்துப் போகிறது. மக்களுக்கு இரண்டு விதமான விதிகள் இருந்தால் ஒரு குடும்பம் செயல்படுமா? பிறகு ஒரு நாடு எப்படி இயங்கும்? நமது அரசியலமைப்புச் சட்டமானது, அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது.


பொது சிவில் சட்டம் என்ற பெயரில் மக்களை சிலர் தூண்டி விடுகிறார்கள். எந்தெந்த அரசியல் கட்சிகள் தங்களைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் பெறுகிறது என்பதை இந்திய முஸ்லீம் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். யுசிசி என்ற பெயரில் இப்படிப்பட்டவர்களைத் தூண்டி விடுவதற்கான வேலைகள் நடைபெறுவதை நாம் பார்க்கிறோம்.

ree

உண்மையாகவே முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால், முஸ்லீம் சகோதரர்கள் ஏழைகளாகவோ அல்லது தாழ்த்தப்பட்டவர்களாகவோ இருக்க மாட்டார்கள். உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. எதிர்கட்சிகள் வாக்கு வங்கிக்காக மட்டுமே இதனைப் பயன்படுத்துகிறது” என பேசினார்!

.

இதற்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். !

அந்த வகையில் அகில இந்திய மஜ்லீஸ்-இ-இடிஹதுல் முஸ்லீமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை பிரதமர் பிரச்னையாகக் கருதிகிறார். ஒருவேளை அரசியலமைப்புச் சட்ட விதி 29ஐ பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். எனவேதான் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்தியாவின் பன்முகத் தன்மை மற்றும் பன்மைத்துவத்தை குலைக்கப் பார்க்கிறார்” என்றார்.!

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வேணுகோபால், “மணிப்பூர் கலவரம், நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லா நிலை ஆகியவற்றைப் பற்றி பிரதமர் மிகவும் அரிதாக பேசுகிறார். எனவே, முதலில் நாட்டில் நிலவும் வறுமை, விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா நிலை குறித்து பிரதமர் பேசட்டும். மணிப்பூர் கலவரம் பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை” என தெரிவித்தார். மேலும், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய பிரமுகர்கள் கூறுகையில், “ஒபாமாவின் அறிவுரயை பிரதமர் மோடி சரியாக புரிந்து கொள்ளவில்லை. இந்து பிரிவில்லா குடும்பத்திற்கு ஒரு முடிவு இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினர். என்கிற தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது!


மத்தியப் பிரதேசத்திலும் கரையும்

பாரதிய ஜனதா! கர்நாடகத்தின் வழியில்!!


அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற கர்நாடக மாநிலத்தைப் போலவே தற்போது மத்தியப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து தொடர்ச்சியாகத் தொண்டர்களுடன், தலைவர்கள் வெளியேறி காங்கிரஸில் இணைகின்றனர்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரும் சிவபுரி மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவருமான ராகேஷ் குமார் குப்தா, திங்கள்கிழமை பெரியளவில் கார்களின் அணிவகுப்புடன் 2000-க்கும் அதிகமான தொண்டர்களுடன் காங்கிரஸில் இணைந்தார். மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மற்றும் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேர்ந்தார்.

இவர், 2020-ல் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து காங்கிரஸிலிருந்து வெளியேறிய போது தான் முதல்வர் பதவியை கமல்நாத் ராஜிநாமா செய்ய நேர்ந்தது. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

போபால் நகரில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இணைப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் முன் கைகளைக் கட்டிக் கொண்டு மன்னிப்புக் கேட்டார் குப்தா. நான் மீண்டும் சொந்த வீட்டுக்குத் திரும்பியுள்ளேன். என்னுடைய பெயர், மரியாதை மற்றும் தலைமைப் பண்பு எல்லாவற்றையும் காங்கிரஸ்தான் தந்தது. 40 ஆண்டு காலம் நான் காங்கிரஸில் பணியாற்றியிருக்கிறேன்.

மக்களுக்காக உழைத்திருக்கிறேன். நாட்டின் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து சாகும் வரையிலும் என்னுடைய தந்தையும் காங்கிரஸ் தான். காங்கிரஸ் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் நான் தவறிழைத்து விட்டேன்.

கைகளைக் கட்டிக் கொண்டு இங்கே வந்திருக்கிறேன். தயவுசெய்து மன்னியுங்கள் என்றார் ராகேஷ் குமார் குப்தா!.

ree

என்னுடைய ஆன்மா காங்கிரஸில் தான் இருந்தது, உடல் தான் பா.ஜ.க.வில் இருந்தது. பாரதிய ஜனதா சொல்வதற்கும், செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

கமல்நாத் அரசு மிகக் குறுகிய காலத்தில் நிறைய செய்தது. இந்த (கமல்நாத்) அரசு கவிழ்க்கப்பட்டதால் தான் விவசாயிகள் கடன்களை ரத்து செய்ய முடியாமல் போய் விட்டது. என் மனம், உடல். சிந்தனை எல்லாமே காங்கிரஸ் தான்.

சாகும் போதும் நான் காங்கிரஸ்காரனாகவே சாக வேண்டும் என்றார் குப்தா. ராகேஷ் குமார் குப்தாவின் வருகை மூலம் சிவபுரி வணிக சமுதாயத்தின் ஆதரவைத் திரட்ட முடியும் என காங்கிரஸ் கருதுகிறது. பாரதிய ஜனதாவில் உரிய மரியாதை தரப்படாமல் குப்தா ஓரங்கட்டப்பட்டதாகவும் துணைத் தலைவர் பதவியளித்தாலும் எந்தப் பங்களிப்பும் தரப்படவில்லை. பொது நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பதில்லை என்றும் குப்தாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நிறைய தலைவர்கள் காங்கிரஸுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர். தங்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையில்லாமல் இவர்கள் செல்வதாகத் தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சி, அங்கே போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என நினைக்கிறார்கள். அதெல்லாம் மிகவும் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளது.!

கடந்த சில நாள்களுக்கு முன்னர் தான் கட்சித் தலைவர் வி.டி.சர்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கட்னி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ துருவ் பிரதாப் சிங் கட்சியிலிருந்து விலகினார். கடந்த மே மாதத்தில் முன்னாள் அமைச்சர் தீபக் ஜோஷி கட்சியிலிருந்து விலகினார். முன்னாள் முதல்வரும் கட்சியின் நிறுவன உறுப்பினருமான மறைந்த தன்னுடைய தந்தை கைலாஷ் ஜோஷிக்கு சிவராஜ் சிங் சௌஹான் நினைவுச் சின்னம் அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் தீபக் ஜோஷி

இதேபோல, ஜூன் மாதத்தில் மற்றொரு பாரதிய ஜனதா தலைவரான வைஜ்நாத் சிங் யாதவும், சிந்தியாவுடனான தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு, 700 கார்கள் அணிவகுக்க காங்கிரஸில் இணைந்தார். பாஜகவிலிருந்து யாதவேந்திர சிங் யாதவ் என்பவரும் மார்ச் மாதத்தில் காங்கிரஸில் இணைந்தார்.! என்பது குறிப்பிடதக்கது!




 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page