நாடாளுமன்ற தேர்தல்! சூடுபுடித்ததே அரசியல்!தென்சென்னை குஷ்பூவுக்கா-ஜெயவர்த்தனேவுக்கா! செம்மலைபேட்டி!!
- உறியடி செய்திகள்

- Jun 12, 2023
- 3 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
அதிமுகவுக்கான இடங்களை தேர்வு செய்து விட்டு கூட்டணி கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப தான் சீட் வழங்குவோம் என்றுமுன்னாள் அமைச்சர் செம்மலை கூறினார்!
அதிமுகவுக்கான இடங்களை தேர்வு செய்தபின்னர்கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் தகுதி, மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கு ஏற்ப அது ஒற்றை இலக்கா, இரட்டை இலக்கா ஒரு இடமா, இரண்டு இடமா, கட்சியின் செல்வாக்கை பொறுத்து இருக்கும்.
என்று முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார்!.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பியும் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தனுக்கு கொடுப்பதாக அதிமுக வட்டாரதலைமை உறுதியளித்திருந்த நிலையில் அந்த தொகுதியை எப்படியாவது பெற்றிட வேண்டுமெ ன்று முயற்சிப்பதாக பரப்பரப்பு தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் வைராலாகி வருகிறது!
மேலும் கூடுதல் தகவலாக இந்த தொகுதியை குஷ்புவும் குறி வைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக இப்போதே ஆயத்தமாகி வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற சந்தேகத்தை கிளப்பும் வகையில் தொடர் சம்பவங்கள் அரங்கேறியும் வருவதாக கூறப்படுகின்றது!.
இருப்பினும் அதிமுக தலைமையிலான கூட்டணி பாஜக அங்கம் வகிக்கும் என இரு கட்சிகளும் உறுதியளித்துள்ளன. எனினும் தமிழகத்தில் 25 பாஜக எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வந்த தகவலும் ஒரு பக்கம் பா.ஜ.க.விரை தமிழகத்தில் உற்சாகமடையச் செய்துள்ளதாக பா.ஜ.வட்டார தகவல்கள் கசிந்தும் வருகின்றது!.
கூட்டணியில் இருக்கும் போது மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 25 ஐ எப்படி பாஜகவுக்கு அதிமுக விட்டுக் கொடுக்கும். ஒரு வேளை பாஜக தனித்து போட்டியா என்றெல்லாம் தமிழக அரசியல் களத்தில்கேள்விகளும் எழுந்தன.
ஒரு வேளை அதிமுகவிடம் 25 சீட்டுகளை "எப்படியாவது" பாஜக பெற்றுவிடுமா என்ற ஆரூடத்திற்கும் பஞ்சமில்லை !
தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் இத்தகைய ஆடு புலி ஆட்டத்தில் வெகுண்டு போன
அதிமுகவினரோ பாஜகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே சீட்டுகளை ஒதுக்க விரும்புவதாக அக்கட்சி வட்டாரத்தில் பரவலான தகவல்கள் கூறப்படுகிறது.!
மேலும் அதிமுக,கட்சி தலைமைதான் சீட் குறித்து பேசும், அண்ணாமலை எதையாவது பேசட்டும் என்று அதிமுகவினர் அமைதி காக்கின்றனரா? என்கிற ஐய்யங்களுக்கும் பஞ்சமில்லை!
ஆனால் பா.ஜ.வினரால்அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் அமித்ஷாவோ நேற்றைய தினம் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி என்பதே இலக்கு என அதிமுகவினரின் தலையில் இடியை இறக்குவதைப் போல அமித்ஷா தெரிவித்துள்ளதாக தகவல்களும் பரவத் தொடங்கியது!
.
இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்படவில்லை. ஆனால் கூட்டணி தலைமையான அதிமுகவுக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையிலும் இவர்களாகவே அதிமுகவுக்கு 15 இடங்களை கொடுப்பது போலும் அமித்ஷா பேசியுள்ளார். அதிலும் கடந்த முறை தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் தோற்றுவிட்டார்.
சீட்களை முடிவு செய்வது அதிமுக தான்: செம்மலை!
இதனால் இந்த முறை தென் சென்னை தொகுதியில் ஜெயவர்தனுக்கு சீட் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் சென்னையில் பூத்துக் அமைக்கும் பணிகள் 60 சதவீதம் நடந்து வருவதாக அமித்ஷா கூறியுள்ளார். இதை பார்க்கும் போது தென் சென்னை தொகுதியை பாஜக குறி வைப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. தென் சென்னை தொகுதியை குறி வைத்தே குஷ்பு தேர்தல் வேலையில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்கு ஜெயவர்தனும், பாஜகவுக்கு குஷ்புவும் முக்கியமானவர்கள் என்பதால் இந்த தொகுதி யாருக்கு கிடைக்கும் என்கிற போட்டி ஒரு பக்கள் அதிகரிக்கவே தொடங்கியுள்ளதாகவே அதிமுக- பா.ஜ. அரசியல் நகர்வுகள் தென்படுவதாக கூறுகின்றனர் விவரம் அறிந்த சிலர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர், அதிமுக,அமைப்பு செயலாளர் செம்மலை செய்தியாளர்களிடம்கூறியதாவது!
தமிழ்நாட்டை பொறுத்தவரை அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைகின்ற வாய்ப்பு நிச்சயமாக இருக்கும். தமிழகத்தில் அமைக்கப்படுகின்ற கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது.
எந்த கட்சியோடு, எந்த தேசிய கட்சியோடு, மாநில கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து முடிவு எடுப்பார்.

அது தான் இறுதி முடிவாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு சாதாரண சிறிய கட்சிகள் கூட அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற அவர்களின் விருப்பத்தையோ? எண்ணத்தையோ குறை சொல்ல முடியாது. பாஜவை பொறுத்தவரை தேசிய கட்சி என்ற அடிப்படையில், மத்தியில் ஆட்சி செய்கிறது என்ற அடிப்படையில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிடலாம் என்று விருப்பம் இருக்கும்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பாஜ தலைவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் அதிக இடங்களை பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆசை, எண்ணம் இருக்கலாம். எங்களை பொறுத்தவரை நாங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது.
அந்த இலக்கின் அடிப்படையில் எங்களுக்கான இடங்களை தேர்வு செய்து, கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் தகுதி, மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கு ஏற்ப அது ஒற்றை இலக்கா, இரட்டை இலக்கா ஒரு இடமா, இரண்டு இடமா, கட்சியின் செல்வாக்கை பொறுத்து இருக்கும். அப்படி தான் எங்களுடைய கூட்டணி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆக கொளுத்திப் போட்டாச்சோ!
சரி.....இனி நடப்பதெல்லாம் நாரயாணன் செயலோ!
பொறுத்திருந்துதான் பார்ப்போம்!
கூட்டணி கட்சிகளின் ரியாஸனை!!
சராம்




Comments