மக்கள் பணி - கட்சி பணி! தலைவர் கலைஞர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் அமைச்சர், கே.என்.நேரு!!
- உறியடி செய்திகள்

- Dec 3, 2022
- 3 min read


மணவை, எம்.எஸ்.ராஜா...
கட்சிப் பணி -மக்கள் பணி.......
முத்தமிழறிஞர் கலைஞர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில்... அமைச்சர் கே.என்.நேரு.........
ஒரு சிறப்பு பார்வை!........
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில், அனைத்து அரசுத்துறைகளும் மேல்மட்டம், முதல் அடி மட்டம் வரை செயலிழந்துவிட்டதோடு, அரசின் திட்டங்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகளை, தேவைகளை பூர்த்தி செய்யாமல், அன்றையஆட்சியாளர்களின், தேவைகளை மட்டுமே பூர்த்தி கொள்ளும் வகையில் ஆட்சியாளர்கள் செயல்பட்டதாக, இன்றைக்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் விசுவரூபம் எடுத்துவருகிறது....

கடந்த, 18. மாதங்களுக்கு முன்னர் பெரும்பான்மை பலத்துடன், தமிழக ஆட்சி பொறுப்பை, தி.மு.கழகம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருப்பேற்றப்பின்னர் இன்று மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகள் வாழ்வாதாரம் போன்றவற்றை உறுதிபடுத்திடும்வகையில் அனைத்து துறைகளின் நிர்வாக கண்காணிப்பையும் - வளர்ச்சி, மக்கள் நல திட்டப் பணிகளையும் தனி கவனத்துடன் மிக தீவிரமாக செயல்படுத்தப்படுவதோடு அதனை சம்மந்தப்பட்டத்துறைகளின் அமைச்சர்கள் மட்டுமின்றி சீனியர் அமைச்சர்களும் திட்டப் பணிகள் நடைபெறும், செயல்படுத்தப்படவுள்ள சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அதிரடியாக......

ஓய்வு உறக்கம் இல்லாமல், தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுழற்றிவிட்ட பம்பரமாக சுழன்று மக்களுக்காக செயல்படுத்தப்படும் அரசின் வளர்ச்சி, திட்டஆய்வுப் பணிகளில் அதிரடி ஆய்வுகளை மேற்க்கொண்டு, அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும்,செயல்பட்டு வருவதும் அனைவரும் நன்கு அறிந்ததே.....

இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்..... சுழற்றிவிட்ட பம்பராமாய் சுழன்று மக்கள் நலபணியாற்றும் அமைச்சர் பெருமக்களில், அமைச்சர் கே.என்.நேருவின் பணிகள் தனித்துவமாக கவனத்தை ஈர்ப்பதுடன் அனைத்துத்தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் உள்ளதாக, தி.மு.கழகத்தினர் மட்டுமல்ல, அரசுத்துறை அதிகாரிகளும், சமூக, அரசியல் பார்வையாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் பொதுமக்களும் பெருமையுடன் கூறிவருகின்றனர்..........

கே.என்.நேரு தி.மு.கழகத்தின் முதன்மை செயலராகயில்லாமல், முதல்வர் - தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதன்மை தொண்டராக திருச்சி- சேலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி பணியாற்றுவது ஒரு புறம் என்றாலும்.....
முதல்வர் தனக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி - நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறையின் திட்ட - வளர்ச்சிப் பணிகளும், குக்கிராமங்களில் வாழும், குப்பனையும் - சுப்பனையும் சென்றடையும் வகையில்.........

இடைவிடாத தனது பணிகளை, மூத்த அனுபவம்மிக்க, தி.மு.கழக பொதுச் செயலாளர், தமிழக நீர்வழி - கனிமவளத்துறை அமைச்சர் துரை-முருகன்,உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் (கி) மாவட்ட செயலாளர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், மூத்த அரசுத் துறை அதிகாரிகளின் துணையோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல், நெறி, வழிகாட்டுமுறைகளின் உத்தரவுப்படியும்.........

தமிழ்நாட்டின் இதயமாக கருத வேண்டிய துறைகளில், சுகாதாரம், உள்ளிட்ட பிற முக்கியத்துறைகளோடு மக்களின் வாழ்வாதாரம் காக்கும், மிக முக்கியமான, தமிழக நகராட்சி மண்டலங்கள், நகராட்சி, பேரூராட்சிகள் நிர்வாகம்- தமிழக மக்களின் குடிநீர் வழங்கல் துறையிலும், தொடர்புடைய அனைத்துத்துறை அமைச்சர்களோடும் கே.என்.நேரு
சுற்றி சுழன்று ஒதுக்கப்பட்ட பணிகளோடு மக்கள் நலப் பணிகளையும் செய்தும் வருவதாகவும் கூறுகின்றார்கள் விபரமறிந்தவர்கள்.....

இதன் நீட்சியாக, கடந்த டிச.1.வியாக்கிழமை, தி.மு.கழக தலைமை கழகம் அண்ணா அறிவாலையத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமையில் நடைபெற்ற கட்சி. வளர்ச்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கேற்ப பிற்பகலில் விழப்புரம் மாவட்டத்தில் மண்டல அளவிலான அரசு திட்டவளர்ச்சிப்பணிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் பேரசிரியர்,க, பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளாச்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன், இணைந்து கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை, அறிவுறுத்தலைகளை வழங்கியவர், தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு,..........

மறுநாள் டிச.2.வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டத்தில், மண்டல அளவிலான வளர்ச்சிப் பணிகளை தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் (கி) மாவட்ட செயலாளர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சி.வெ.கணேசன், மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாச்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன், நடைபெற்று வரும் வளர்ச்சி பணி - முடிந்த, செயல்படுத்தப்படவுள்ள பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு பணிகள் குறித்த முதல்வரின் உத்தரவு-வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துக் கூறி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் ஆலோசனைகளை வழங்கி வலியுறுத்தினார்.....

பிற்பகலில், கிழக்கில் உதயமாகி - மேற்கில் மறையும் சூரியனைப் போல், தஞ்சாவூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான வளர்ச்சி திட்டப்பணிகளை, தமிழக அரசு கொறடா கோ.வி.செழியன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்ளிட்ட, நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்கள் - மக்கள் பிரதிநிதிகளோடு, தஞ்சாவூர்.திருவாரூர், நாகப்பட்டினம், மைலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்று வரும், வளர்ச்சபணியில் ஈடுப்பட்டு பணிகள் ஆய்வுகளை மேற்கொண்டு, பணிகள் சம்மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளிடம் உரிய அறிவுறுத்தல் ஆலோசனைகளையும் வழங்கினார்........

முன்னதாக தேசிய நகர்புற வாழ்வாதாரப் பணித்திட்டம் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளை வழங்கி, அவர்களின் கோரிக்கைகளையும் துரிதமாக நிறைவேற்ற அறிவுறுத்தல்கள் வழங்கினார்...
முன்னதாக அம்மாபேட்டையில் புதிதாக கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் புதிய பேருந்துநிலையத்தை திறந்துவைத்த அமைச்சர் கே.என்.நேரு , புதியபேருந்துநிலையத்திலிருந்து பேரூந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கிவைத்து, அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்...

இதனை தொடர்ந்து. இன்று டிச.3ம் ந்தேதி சனிக்கிழமை காலை செயின்ட் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், 52. மாற்றுத்திறனாகளுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ,க்கள் செளந்தரபாண்டியன், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாநகர மேயர் மு.அன்பழகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாச்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ......

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்களும் வழங்கினார்......
இதனை தொடர்ந்து, திருச்சி உய்யங்கொண்டான் வாய்க்கால்கள் செல்லும் பகுதிகளான, ராஜா காலனி, வண்ணாரபேட்டை, சீனிவாசா நகர், பாரதிநகர் ஆகிய பகுதிகளை இணைத்து, பொதுமக்கள் சென்றுவர புதிய பாலங்கள் அமைப்பதற்கான இடங்களை, மாநகரமேயர் மு.அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்,பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கினார்....

இதனையடுத்து, திருச்சி மத்திய பேரூந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கம் கூட்டறங்கில், கரூர், புதுக்கோட்டை , அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களின் வளர்ச்சி - திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்..........,


அரியலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் .சிவசங்கர் , எம்.பி.க்கள் திருநாவுக்கரசர். ஜோதிமணி.எம்.எல்.ஏ.க்கள் குளித்தலை இரா.மாணிக்கம், காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி, கதிரவன்' ஸ்டாலின் குமார், அப்துல் சமது, இனிகோ இருதயராஜ்.இளங்கோவன் | சிவகாமசுந்தரி உள்ளிட்டவர்கள். அரசு அதிகாரிகள் , உள்ளாச்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்க்கொண்டார், வழிகாட்டு நெறிமுறைகளை கூறினார்.......
பின்னர் நலத்திட்ட பயணாளிகளுக்கு அரசுதிட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனையடுத்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகம், முன்பு பெண்களுக்கு எதிரான, வன்கொடுமைகள், சமூக அநீதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணியையும், கொடி அசைத்து துவக்கிவைத்தார்....


இப்படி இடைவிடாது தொடர்ந்து, மாவட்டங்கள் தோறும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு-அதிகாரிகளுக்கு ஆலோசனை-மக்களுக்கான நலத்திட்டத்தை வழங்கி தி.மு.கழக தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களையும் - சிந்தனைகளையும் நன்கு புரிந்துகொண்டு செயலாற்றி வரும்,......


தி.மு.கழகத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் பெற்ற மாறா அன்பை , அதே வழியில், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் நம்பிக்கை மிகுந்த முதன்மை தொண்டராக பணியாற்றி (பருவமழை, வெள்ள தடுப்பு. மீட்பு பணிகள் உள்ளிட்டவற்றிலும் ஈர்ப்புடனும். தனி கவனத்துடனும்,
தான் கொண்ட கொள்கை பிடிப்போடு தானும் தனது குடும்பமும், மீளமுடியா இழப்புகள் பெற்றும் மனம் தளராது. அரசியல் காழ்ப்புணர்ச்சிமிக்கவர்களே...... அஞ்சிடும்வகையில் தொடர்ந்து தொய்வில்லாமல்............

தேனீ போன்ற, முதல்வர் மு.க.ஸ்டாலின் தூதுவராய், முத்தமிழறிஞர் கலைஞர் வழிநடத்திய பாதையில் அணுவும் பிசகாமல் பணியாற்றிவரும், நகராட்சி நிர்வாகம்- குடி நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அயராத பணிகளுக்கு......
மக்கள் அனைவரோடும் சேர்ந்து ஒத்துழைப்போம் .......
அமைச்சரின் மக்கள் நல செயல்பாடுகளை நாமும் போற்றி வரவேற்போம்.......
உறியடிசெய்தி இணையதளம்.....




Comments