பெரியார், அண்ணா. காமராஜரை படியுங்கள்! குணத்தை இழந்தால் எல்லாம் இழந்துவிடுவோம்! நடிகர் விஜய் பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Jun 17, 2023
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
பெரியார், அண்ணா. காமராஜரை படியுங்கள்! குணத்தை இழந்தால் எல்லாம் இழந்துவிடுவோம்! மாணவர்களிடம் நடிகர் விஜய் பேச்சு!
பெரியார், அண்ணா. காமராஜரை படியுங்கள்! குணத்தை இழந்தால் எல்லாம் இழந்துவிடுவோம்! நடிகர் விஜய் பேச்சு!!காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட வேண்டாம் ! பெற்றோர்களுக்கு கூறுமாறு ரசிகர்மன்ற விழாவில் நடிகர் விஜய் பேச்சு!
நம்விரல் கொண்டு நம் கண்களை குத்திக் கொள்வது போல தான் காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது என்று நடிகர் விஜய் பேசினார்!.


சென்னை நீலாங்கரையில் உள்ள அரங்கில் பேசிய அவர் இவ்வாறு பேசினார்!
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் முதல் மூன்று மதிப்பெண்களை பிளஸ் டூவில் பெற்ற மாணவ மாணவிகளுக்கு இன்று பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில். மாநில அளவில் அதிகம் மதிப்பெ ண்கள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ரீதியாக,சான்று மற்றும் பரிசுகளை வழங்கினார் நடிகர் விஜய்.
அப்போது அவர் பேசியதாவது,
பெற்றோர்கள் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடக்கூடாது என மாணவர்கள் நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
மாணவ மாணவிகள் நினைத்தால் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.
அடுத்த தேர்தலில் முதல் வாக்கை பதிவு செய்ய உள்ள நீங்கள் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள்.
பாட புத்தகங்களை மட்டுமல்ல மாணவர்களை நன்கு படிக்க வேண்டும்.
உன் நண்பர் யார் என்று சொல் நீ யார் என்றுயார் என்று சொல்கிறேன் என்ற நிலைமை மாறிவிட்டது.
எந்த சோசியல் மீடியாவை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்து இன்று நம் குணம் அறியப்படுகிறது.
நம்மைச் சுற்றி கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரி எது தவறென அறிய வேண்டும்.

சமூக வலைதளங்களில் தவறான செய்தி தான் தற்போது அதிகம் வெளியாகிறது.
அப்படி சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை வெளியிடுபவர்களுக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் உள்ளது.
பல விழாவில் பங்கு பெற்ற எனக்கு கல்வி உதவி விழாவில் பங்கேற்கும் போது பொறுப்பு வந்துள்ளதாக உணர்கிறேன்.
பொது தேர்வில் முதலிடம் பிடித்த நண்பா நண்பிகளுக்கு நன்றிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.
மாணவர்களின் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன் அதுவே இந்த நிகழ்ச்சி .
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கியுள்ளேன் .
காடு, சொத்து பணம்ம் சொத்து எல்லாவற்றையும் உன்னிடம் இருந்து கொள்ளலாம். ஆனால்படிப்பை மட்டும் உன்னிடம் எடுத்துக் கொள்ள முடியாது என்ற அசுரன் பட வசனத்தை குறிப்பிட்டு பேசிய நடிகர் விஜய், பள்ளிப்படிப்பு முடிந்த பின் உங்கள் குணம் சிந்திக்கும் திறன் மட்டுமே இருக்கும் .
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கூறவில்லை பெற்றோர் அரவணைப்பில் இருந்து அனுபவியுங்கள் .
வெளியில் செல்லும்போது கிடைக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திட வேண்டாம் உங்கள் சுய அடையாளத்தை இன்று விட்டுக் கொடுக்காதீர்கள்.
அதேபோல் வெற்றி பெறாதவர்களுக்கு உதவுங்கள் பொதுத்தேரில் வெற்றி பெறாதவர்கள் மீண்டும் வெற்றி பெற உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள், டாக்டர் அம்பேத்கர் காமராஜ் தந்தை பெரியார் ஆகிய தலைவர்களின் வழியை பின்பற்றுங்கள் என்று நடிகர் விஜய் பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 6000 பேர்களுக்கு 15 வகையான சைவ உணவுகளை தயார் செய்துட பரிமாறப்பட்டது. முன்னதாக
ரசிகர்கள் புடைசூழ விழா அரங்கிற்கு வந்தார் நடிகர் விஜய்
மேடையில் அமராமல் மாணவர்களுடன் ஒன்றாக முதல் வரிசையில் அமர்ந்தார் நடிகர் விஜய்!




Comments