சமூக வாழ்வியல், ஆரோக்கியம் காத்திட 10 கோடி மரக்கன்றுகள் நடவு! அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்!!
- உறியடி செய்திகள்

- Jun 12, 2023
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா.....
தமிழ்நாடு அரசு சார்பில் சமூக வாழ்வியல், ஆரோக்கியம் காத்திட
10 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு
சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்!
தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது!
தி.மு.கழகத்தலைவர்,
தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடஅரசு சார்பில் கடந்த ஆண்டு 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன!
உலக வெப்பமயமாதலை தடுக்க மரங்களை வளர்க்க வேண்டும் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 10 கோடி மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட வேண்டும் என்ற இலக்குடன் முதல்வர் தளபதியாரின் வழிகாட்தலின்படி பயணித்துக் கொண்டிருக்கிறோம்!
மரக்கன்றுகள் அனைத்தும் ராஜமுந்திரியில் இருந்து தரமான பலவகை மரக்கன்றுகளாக வரவழைக்கப்படுகின்றன அனைத்து பகுதிகளிலும் அரசு இடங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு முறையாக வளர்க்கப்படுவதாகவும்
தொடர்ந்து ஆட்களை கொண்டு பராமரித்து வருவதாகவும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார்!
மரங்களின் பயன்கள்:
மரங்களை வளர்க்கும் பழக்கம் பல நூற்றாண்டுகளாகவே மனிதர்களிடையே இருந்து வருகிறது. ஆனால் 21-ம் நூற்றாண்டில் மரம் வளர்ப்பது வெறும் தேவைகளின் அடிப்படையிலானதாக மட்டுமே இல்லாமல், பூமியைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்துக்குக் கிடைத்த ஒரு முக்கியமான ஆயுதமாகக் கருதப்படுகிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
காடுகள் மீட்டுருவாக்கம், மரம் நடுதல் போன்ற செயல்பாடுகள், காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையுமென்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்து தமிழகம் முழுவதும் 10 கோடி மரங்கள் நட தீர்மானித்துள்ளனர் ஆனால், உண்மையாகவே இப்படி கோடிக்கணக்கில் மரங்கள் நடுவது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துமா?

இன்று உலகமே காலநிலை மாற்றத்திற்குத் தீர்வு தேடிக் கொண்டிருக்கிறது. அதிகமான மரங்களை நடுவதே இதற்குத் தீர்வாக அமையுமென்று பெருவாரியான மக்கள் தொகை நம்புகிறது, அந்த வேலைகளில் ஈடுபடுகிறது. ஏனெனில், இது மிகவும் எளிமையானதும்கூட. யார் வேண்டுமானாலும் வெளியே சென்று ஒரு மரத்தை நட்டு வைத்துவிட்டு, நான் பூமியின் நிலையைச் சரிசெய்வதற்கு என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துவிட்டேன் என்று சொல்ல முடியும். இத்தகைய மனநிலையோடு செயல்படுவது தனிநபர் பங்களிப்புகளுக்குச் சரியாக இருக்கும். ஆனால், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளே மரம் நடுவதை மட்டும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இயங்குவது எந்தளவுக்குச் சரி என்ற கேள்வியும் பல்வேறு தரப்பினரிடையே எழுகிறது.
ஆகவே, மரம் நடுவது உண்மையாகவே காலநிலை மாற்றத்துக்குப் பங்கு வகிக்குமா என்பது குறித்துப் புரிந்துகொள்ள சர்வதேச சுற்றுச்சூழல் பத்திரிகையான மங்காபே, ஓர் ஆராய்ச்சியாளர்கள் குழுவை ஒருங்கிணைத்தது. அந்த ஆய்வுக்குழு, உலகளவில் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் நடைபெறும் பல்வேறு மக்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளின் மரம் நடும் முயற்சிகளைப் பற்றிய பகுப்பாய்வை மேற்கொண்டு, அதன்மூலம், மரம் நடுவது உண்மையாகவே பலனளிக்கிறதா என்பதை ஆய்வு செய்தது.
அதில், இதுபோன்ற மிகப் பெரிய அளவிலான மரம் நடும் முயற்சிகளில் எத்தனை மரங்கள் நடப்படுகின்றன என்பதில்தான் பெரும்பான்மை மக்கள் மற்றும் அமைப்புகளின் கவனம் இருக்கிறது. ஆனால், அவர்கள் நடக்கூடிய நிலவியல் அமைப்புக்குத் தகுந்த மரங்களாக அவை இருக்கின்றனவா, இயல் தாவரமாக இருக்கின்றனவா, மரக் கன்றுகளை நட்டபிறகு, அவை வளரும் வரை முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா போன்றவற்றில் எந்தக் கவனமும் செலுத்தப்படுவதில்லை என்று இந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
காலநிலை மாற்றத்தின் வீரியத்தை மட்டுப்படுத்துவது, மரம் நடும் பணிகளின் முதன்மைக் குறிக்கோளாக இருந்தாலும், அது, நீரியல் சுழற்சியை முறைப்படுத்துதல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், பாலையாகுதலைத் தடுத்தல், காட்டுயிர் வாழ்விடங்களை மீட்டுருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு வழிவகுக்கின்றன. அதோடு, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் மரம் நடும் முன்னெடுப்புகள் மூலம் நாம் அடைய முடியும். ஆனால், தற்போது மக்கள் மேற்கொள்ளும் மரம் நடும் முன்னெடுப்புகள் இவையனைத்தையும் சாத்தியமாக்கக்கூடிய அளவுக்குத் திறன் வாய்ந்தவையாக இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றனர் ஆய்வாளர்கள்.
மரம் நடுவதால் எவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றனவோ, அதே அளவுக்கு, தவறான முறையில் மரங்களை நடும்போது, மோசமான பின்விளைவுகளையும் உண்டாக்கும் என்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்துப் பேசுவதற்கு முன், 2016-ம் ஆண்டு நாம் எதிர்கொண்ட வர்தா புயல் குறித்துச் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். வர்தா புயலின்போது நாம் எதிர்கொண்ட பல்வேறு சேதங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று, புயலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னை முழுக்கச் சாய்ந்துபோன மரங்கள்.
சென்னை நகர்ப்புறம் முழுக்க அரசாங்கத்தால் நடப்பட்ட மரங்களும் சரி, தனியார் நிறுவனங்களால் நடப்பட்ட மரங்களும் சரி, அவற்றில் பெரும்பான்மையானவை மண்ணுக்கு உரியவையே கிடையாது. வர்தா புயலின்போது, நாட்டு மரங்களின் கிளைகள் உடைந்தாலும்கூட, மரங்களின் வேர்ப் பிடிப்பு உறுதியாக இருந்ததால், முழு மரமும் சாயவில்லை. ஆனால், வெளிநாட்டு மரங்களே அதிகம் நடப்பட்டிருந்ததால் நகரத்தின் பெரும்பான்மை பகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் அலுவலக வளாகங்கள் எங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன.
‘வர்தா’ புயல்
‘வர்தா’ புயல்
சென்னை மாநகராட்சி, அந்தப் புயலின்போது, சுமார் 60 சதவிகித பசுமையை இழந்தது. இறுதியில் நிலையாக நின்றது நாட்டு மரங்கள் மட்டுமே. இதன்மூலம், சென்னை முழுக்க நடப்பட்டிருந்த மொத்த மரங்களில் பாதிக்கும் அதிகமான மரங்கள் இந்த மண்ணுக்கே தொடர்பில்லாதவை என்பது புரிகிறது.
ஆம், மரம் நடுவது பாராட்டுக்குரிய, திறம் மிக்க முயற்சிதான். ஆனால், அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான், அது இந்தப் பூமியின் மீது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும் என்பதும் அடங்கியுள்ளது. எனவே நம் முதல்வர் தளபதியாரின் அர கூவலின்படி அனைவரும்
ஒன்றிணைவோம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம் நடுவோம்...
இவ்வாறாக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்....




Comments