ஓ.பி.எஸ்க்கு ப்ளஸ் ஆனதா மைனஸ்! எடப்பாடிக்குமைனஸ் ஆனதா ப்ளஸ்!! அலைக்கழிக்கிறதா மேலிட பாஜக!!!
- உறியடி செய்திகள்

- Apr 30, 2023
- 2 min read

ஓபிஎஸ்ஸூக்கு ப்ளஸ் ஆனதாமைனஸ்! எடப்பாடி பழனிசாமிக்கு மைனஸ் ஆனதா
ப்ளஸ்!!அசரடிக்கிறதா மேலிட பாஜக?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2 விஷயங்களை கேள்விப்பட்டு படுகுஷியில் உள்ளாராம்.
என்ன நடக்கிறது அதிமுகவில்? எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்?
ஏற்கனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய விவகாரம், தேவர் ஜெயந்திக்கும் எடப்பாடி பழனிசாமி வராமல் போனது, தென்மண்டலத்தில் அதிருப்தியை கூட்டியது.
அதே போல, மாயத்தேவர் பிறந்த நாள் விழாவிற்கும் எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை. இதனால், பெரும்பாலான முக்குலத்தோர் சமுதாயமும் எடப்பாடி பழனிசாமி மீதான வருத்தத்தை பதிவு செய்தவாறே உள்ளனர்.
எப்போதுமே கொங்கு மண்டலத்துக்கு ஆதரவாக எடப்பாடி செயல்படுகிறார் என்ற இந்த ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து தான், மூத்த தலைவர் வைத்திலிங்கம் போன்றோர் எடப்பாடியிடமிருந்து பிரிந்து, ஓபிஎஸ் பக்கம் சென்றார்கள். இப்படிப்பட்ட சூழலில், எம்பி தேர்தல் வரப் போகிறது.
அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளதால், அனைவருக்குமான தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுப்பார் என்றே நம்பப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று முன்தினம், டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தையை அமித்ஷாவுடன் நடத்த, தன்னுடன் கொங்கு மண்டல தலைவர்களை மட்டுமே உடன் அழைத்து சென்றுள்ளார்.
இதுதான் முக்குலத்தோர் சமூகத்தினரிடையே மேலும் எரிச்சலை கூட்டி வருகிறது.
இப்படி ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தொடர்ந்து முக்குலத்தோர் புறக்கணிக்கப்படுவதாக அந்த சமூகத்தினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி அதிகரித்து கொண்டிருக்கிறது.
அதாவது, கவுண்டர், வன்னியர் சமூகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டிருந்த நிலையில், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாருமே அதில் இல்லை. அதாவது, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
சீனியர் என்பதால் மீனவர் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமாரை அழைத்து சென்றதாக தெரிகிறது. அதேபோல, உதயகுமார், செல்லூர் ராஜூ போன்றவர்களையும் அழைத்து செல்லவில்லை. விஜயபாஸ்கரைகூட காணோமே என்று நொந்து போயுள்ளார்களாம்.
ஆனால், இதெல்லாம் ஓபிஎஸ்ஸூக்கு பிளஸ் ஆகி கொண்டிருக்கிறதாம். ஒருங்கிணைந்த அதிமுக தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியிருக்கிறார். இதற்கு எடப்பாடி வழக்கம் போல் மறுத்து விட்டாலும், பாஜக தன் மீதான நம்பிக்கையை இன்னும் குறைக்காமல் உள்ளது என்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளாராம் ஓபிஎஸ்.
அதுமட்டுமல்ல, தொடர்ந்து முக்குலத்தோரின் அதிருப்தியை பெற்று வருவதுடன், மதுரையில் நடத்த போகும் எடப்பாடி பழனிசாமியின் மாநாடு, போதுமான பலனையும் பெற முடியாமல் போய்விடும் என்றும் ஓபிஎஸ் நம்புகிறாராம்.
கடந்த வாரம் ஓபிஎஸ் திருச்சியில் மாநாட்டை நடத்தியிருந்தார். அந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர், தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்தே வந்திருந்தார்கள். அத்துடன், ஒருசமூகத்துக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி, அரசியல் செய்து கொண்டிருப்பதாக, அவர்களில் பலர் பொருமினார்களாம்.
அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டுமானால், சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ்ஸின் தற்போதைய திட்டமாக உள்ளதாம்.
ஏற்கனவே, டெல்லி மேலிட சப்போர்ட் இல்லாமல், ஓபிஎஸ்ஸால் இந்த அளவுக்கு அரசியல் செய்ய முடியாது என்ற சலசலப்புகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சசிகலா + தினகரனின் ஆதரவை முழுமையாக, இந்த மாநாட்டில் ஓபிஎஸ் பெற்று விட்டதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், தென்மண்டல வாக்குகளை தன்பக்கம் திருப்ப வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி நிறையவே வியூகங்களை வகுக்க வேண்டியிருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் வல்லுநர்கள். பார்வையாளர்கள்.




Comments