போலீஸ் மூளை! பா.ஜ. தலைவர் அண்ணாமலை கண்டுபிடிப்பு! தமிழகஉளவுத்துறை உறக்கத்தில்!!
- உறியடி செய்திகள்

- Nov 22, 2022
- 1 min read
Updated: Nov 22, 2022

போலீஸ் மூளை, அண்ணாமலை அரிய கண்டுபிடிப்பு! தமிழக உளவுத்துறை உறக்கத்திலாம்!!
திமுக ஆட்சியில் உளவுத்துறை உறக்கநிலையில் இருப்பதால் தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.. சாடிய பா.ஜ.க.அண்ணாமலை…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,மாநில உளவுத்துறை உறக்கநிலையில் உள்ளது.தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில், ஷாரிக் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.
கோட்டை ஈஸ்வரன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று முதல் நாளிலிருந்து தமிழக பாஜக வலியுறுத்தியது.
ஷாரிக் கோவையில் தங்கியிருந்தது, தண்டனையின்றி செயல்படும் தமிழ்நாடு பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது ஆனால் அதை தமிழ்நாடு அரசு மறுக்கிறது என பதிவிட்டுள்ளார்..

இந்தகுறித்து கர்நாடக ஏ.டி.ஜி.பி. கூறுகையில் சம்மந்தபட்ட நபர் ஷாரிக், ஏற்கனவே,2 முறை உபா சட்டத்தில் கைதானவர், தற்ப்போது தேடப்படும் குற்றவாளி என்கிறார்.
அப்படியானால் உபா சட்டத்தில் இருமுறைகைது செய்யப்பட்டு, தற்போது தேடப்படும் குற்றவாளியை ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறைகண்காணிக்க தவறியதா?

மக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, போன்றவற்றில் சர்ச்சைக்குரிய சம்மவங்கள் நடக்கும் போதெல்லாம் அண்ணாமலை சம்பவத்தை அரசியல் உள்நோக்கத்துடன் விமர்சிப்பதும், அவை தொடருவதும், கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக பார்க்க வேண்டியுள்ளது என்கின்றர், அரசியல் விபரமறிந்தவர்கள்...




Comments