பூண்டி கலைவாணன் கடும் குற்றசாட்டு! அதிமுக,ஆட்சியில் மக்கள் நலனில் அக்கரையில்லாமல் செயல்பட்டனர்!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் மக்கள் நலனில் அக்கறை இல்லை! திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் கடும் குற்றச்சாட்டு.!
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தாலுகாவிற்குட்பட்ட பெருந்தரக்குடியில் 2021 -22 ஆம் ஆண்டு சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது. வலங்கைமானில
5 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் வலங்கைமானில் 500 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு, கோட்டூர் வட்டாரம் மேல்நத்தம் பகுதியில் 1000 மீட்டர் டன் சேமிப்பு கிடங்கு, நீடாமங்கலம் வட்டாரம் காலாஞ்சி மேடு பகுதியில் 2000 மெட்ரிக் டன் சேமிப்பு திட்டங்களை தி.மு.கழகத் தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.!

இதனை தொடர்ந்து பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு அர்பணித்தார்.!


நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசுகையில்..
கடந்த அதிமுக ஆட்சியில் குளிக்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால் தி.மு.கழகத் தலைவர் தமிழக முதல்வர், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக ஆட்சி பொறுப்பேற்றவுடன், காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட, தமிழகம் முழுவதுமுள்ள மக்கள் நலத்திட்டங்களை சொல்வதை செய்யும் நமது முதல்வர் தளபதி சொல்லாமலே பல ஆக்கப்பூர்வமான, மக்கள் பயன்பெறும் திட்டங்களை
அரசியல் பாகுபாடுகள் நிறைவேற்றி வருகின்றார்.
அரசியல் பாகுபாடுகளுக்கு இடமில்லாமல், அவர்கள் அன்று விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் இப்போதுநிறைவேற்றப்பட்டு வருகிறது!.
கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளை குறித்து கவலைப்படவே இல்லை.!
மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாக கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி இருந்தது இவ்வாறு அவர் பேசினார்!
கொரடாச்சேரி ஒன்றியக் குழு துணை தலைவர் பாலச்சந்தர், வேளாண் துணை இயக்குனர் சாருமதி, உதவி பொறியாளர் கலைமணி, வேளாண் அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் சார்பு அணியினர் கலந்து கொண்டனர்.




Comments