தொடர்புறக்கணிப்பிலா குடியரசு தலைவர்! ஜனபதி - கவர்னர் பதவிகள் எதற்கு? கொதிக்கும் நெட்டிசன்கள்!
- உறியடி செய்திகள்

- Sep 26, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா..
தொடர்புறக்கணிப்பிலா குடியரசு தலைவர்! ஜனபதி - கவர்னர் பதவிகள் எதற்கு? கொதிக்கும் நெட்டிசன்கள்!
கவர்ச்சி நடிகை கங்கனா ரனாவத் மந்திரியோ எம்பியோ இல்லை ஆனால் புதிய பாரளுமன்ற. ஆரம்ப நிகழ்சிக்கு அழைக்கபடுகிறார். ஆனால் இதே பாஜக அரசால் முன் மொழியபட்டு அவர்கள் சார்ந்த பிரதிநிதியாக ஏற்கனவே அவர்கள் பாஜக கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர் முர்மு மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கபட்டவர்!
ஆனால் பாராளுமன்ற திறப்புவிழா விற்கும் சரி இப்போதைய பாரளுமன்ற கூட்ட ஆரம்ப விழாவிற்க்கும் அழைக்காதது ஏன். ஒரு கவர்ச்சி நடிகைக்கு இருக்கும் தகுதி கூட நாட்டின் முதல் குடிமகளுக்கு இல்லையா. அவர் வந்தால் என்ன பாதிப்பு அப்படி நினைப்பவர்கள் ஏன் இவரை ஜனாதிபதி வேட்பாளராக உங்கள் சார்பாக நிறுத்தபட வேண்டும்?

பாராளுமன்றத்திற்கு அவர் வந்தால் தீங்கு என்று நினைப்பவர்கள் எப்படி நாட்டிற்கு தலைமையாக முதல் குடிமகளாக ஆக்கினார்கள்!
நாட்டிற்கு கெடுதல் என்று உங்கள் சாஸ்திரம் சம்பிரதாயம் சொல்லவில்லையா.!
ஜனாதிபதி கணவரை இழந்தவர் என்றா? இல்லை பழங்குடி இனத்தவர் என்றா? என்ன காரணத்தால் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் புறகணிக்கப் படுகிறார். !
அப்படி பார்த்தால் சிலர் விமர்சனம் செய்வதுபோல பிரதமர் கூட மனைவியால் கைவிட பட்டவர் தானே? சோனியா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கணவர்களை இழந்தவர்கள் தானே!
அதற்காக இவர்களை எல்லாம் புறகணிக்க முடியுமா. ?நீங்களே ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பீர்கள் அப்புறம் நாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒதுக்குவீர்கள்!
இது என்ன நியாயம் என்று புரியவில்லை!

. கங்கனா ரனாவத் என்ன தியாகியா இல்லை முக்கிய பதவியில் இருக்கிறாரா அவருக்கு ஏன் முக்கியத்துவம் நாட்டில் இன்னும் எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள் தியாகிகள் அய்யா நல்லகண்ணு போன்றோர்கள் இருக்கிறார்கள்!
அவர்களை எல்லாம் அழைத்து கூட முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம் . நாளை குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசியக் கொடி ஏற்றுவதற்கு பதிலாக கங்கனா ரனாவத் ஏற்றாமல் இருந்தால் சரி. பேசாமல் ஜனாதிபதி கவர்னர் பதவிகளை எல்லாம் காலி செய்து விடலாம் மக்கள் வரிபணமாவது மிச்சமாகும் இப்படி அவமானங்கள் தவிர்க்க படும்.
இவ்வாறாக சமூக வலைதளவாசிகள் ஆதங்களை அடுக்கடுக்காய் கே ள் வி கணைகளை ஏவி பதிவிட்டு வருகிறார்கள்!




Comments