குளித்தலை தொகுதி தோகமலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்! அமைச்சர்,மா.சுப்பிரமணியன் தகவல்!!
- உறியடி செய்திகள்

- Apr 6, 2023
- 1 min read


குளித்தலை தொகுதி, தோகைமலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்,மா.சுப்பிரமணியன் கூறினார்...
கரூர் மாவட்டம்.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலை நகர தி.மு.கழகச் செயலாளர்,
சட்டமன்ற உறுப்பினர்
குளித்தலை இரா.மாணிக்கம், நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில். குளித்தலை - மணப்பாறை சாலை ரயில்வே மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசி வருகின்றார். அந்தவகையில் இன்று சட்டமன்ற சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் எம்.எல்.ஏ.இரா.மாணிக்கம் பேசும்பொழுது
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்ட தோகைமலை ஊராட்சி ஒன்றியம்
ஆ.உடையாப்பட்டி, கள்ளை, கீழவெளியூர், பாதிரிப்பட்டி, ஆர்.டி.மலைஆகிய பகுதிகளில் உள்ள
ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்மூடப்பட்டு பஞ்சாயத்து இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட இடங்களில்
புதிய கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென இன்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சென்னை மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழக சுகாதாரம். மக்கள் நல்வாழ்வு
துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசுகையில்
தமிழ்நாட்டில் 8713 துணை சுகாதார கட்டங்கள் இருக்கின்றன. அதில் 20 சதவீதம் மேற்பட்ட வாடகை கட்டிடங்கள் இயங்கி கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அந்த கட்டிடங்கள் எல்லாம் படிபடியாக சொந்த கட்டிடங்களில் இயங்குவதற்கு நடவடிக்கையில் . தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடுத்து வருகிறார்கள். அந்த வகையில்
எதிர்வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் முதல்அமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டு, அனுமதி பெற்று
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் சொன்ன கட்டிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் கட்டுவதற்கு நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர்மா.சுப்பிரமணியன் கூறினார்..




Comments