பேராசியர் பிறந்தநாள் . எல்லோருக்கும் எல்லாம், இலக்கை உறுதியுடன் பெறசெய்வோம்.. முதல்வர்மு.க.ஸ்டாலின்
- உறியடி செய்திகள்

- Dec 19, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா...
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின், பேராசிரியர்,க.அன்பழகன் 101,வது பிறந்ததினத்தை யெட்டி, எல்லோருக்கும் எல்லாம் என்கிற இலக்கை நோக்கி உயரே பேராசியர் பிறந்தநாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.....
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகனின் 101வது பிறந்தநாள் விழா
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்தில் அன்பழகன் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை தூவி மரியாதை செலுத்தினார்....

சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டல்
பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
நூற்றாண்டு வளைவு மற்றும் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
இனமான பேராசிரியர் அன்பழகனாரின் நூற்றாண்டு நிறைவு பெற்று இன்று 101. வது பிறந்த நாள்.....
இனமானமும், தன்மானமும், மொழி, இன உணர்வு பிறந்தநாள் இன்று....
தமிழ்நாட்டில் அரசியலும், தி.மு.கழக வரலாற்றிலும் அழிக்க முடியாத தடத்தைவிட்டு சென்றவர் பேராசிரியர்....
சுயமரியாதை இயக்க காலம் தொட்டு-இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரை தனது எழுச்சிமிகு உரைவீச்சால் வழிநடத்திக் கொண்டு இருந்தவர், இப்போக உணர்வால் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்....
திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டி, விளக்காகவும் இருந்த பேராசியர் வழியில்தான் நமது பயணம் தொடர்கிறது....

இந்திய துணைகண்டத்தின் நிலப்பரப்பில், தமிழர்கள் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டு தான் தனது பனி என்று சொன்னவர் பேராசியர்...
அத்தகைய இலக்கைக் கொண்ட தாகவே திராவிடல் மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றது. முதல்அமைச்சர்களில் முதலிடம். இந்திய ஒன்றியத்தின் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்கிற இலக்கை தி.மு.கழகம் அடைந்துள்ளது என்றால் இது தான் பேராசிரியர் பெருந்தடைகாண விரும்பிய கனவு தமிழ்நாடு....

ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணி பாருங்கள் என்று வலியுறுத்தி வேண்டுகோலாக வைத்தார் இனமான பேராசிரியர்...
இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்....
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இவ்வகையகம் உயர, பேராசியர் பிறந்த, இந்த 101. ஆவது பிறந்தநாளில் அனைவரும் உறுதியேற்போம்..
இவ்வாறாக கூறியுள்ளார்...




Comments