பேராசியர் நூற்றாண்டுவிழா!தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே போதுமானது!!அமைச்சர்கீதாஜீவன் பேச்சு!!!
- உறியடி செய்திகள்

- Dec 18, 2022
- 3 min read

மணவை எம்.எஸ்.ராஜா
தூத்துக்குடியில் நடைபெற்ற பேராசியர் அன்பழகன் நூற்றாண்டுவிழாவில், தமிழ்நாட்டிற்கு இருமொழி கொள்கையே போதுமானது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.....
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அவர் புகழ்பரப்பும் வகையில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தன் வாழ்நாள் முழுவதும் கொண்ட கொள்கையில் உறுதியாக, சமரசமின்றி சுயமரியாதையாக வாழ்ந்தவர் க.அன்பழகன்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இவ்வேளையில் அவர் குறித்த சிறிய பிளாஷ்பேக்கை இங்கே காணலாம்.
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த க.அன்பழகன், பெற்றோர் சூட்டிய ராமையா என்ற பெயருடன் பள்ளிக்கல்வியை நிறைவு செய்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்த அவர் பெரியாரின் கொள்கையை ஏற்று செயலாற்றத் தொடங்கினார். தனக்கு இருந்த தனித்தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரி பயின்ற காலத்தில் ராமையா என்ற பெயரை அன்பழகன் என தாமே மாற்றிக்கொண்டார்......

இளங்கலை முடித்த கையோடு அந்தக்காலத்திலேயே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கிய அவர், அவ்வப்போது அண்ணாவை சந்திக்க வந்து செல்வார். அவ்வாறு அன்பழகன் வரும்போதெல்லாம். ''அடடா வாப்பா பேராசிரியர் தம்பி'' என அண்ணா வாஞ்சையோடு அழைத்தது மட்டுமல்லாமல், தன்னை சுற்றி இருபோரிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அன்று அண்ணா சூட்டிய பேராசிரியர் பட்டம் பின்னாளில் அவருக்கு தனிப்பெரும் அடையாளமாக மாறி ''இனமான பேராசியர் அன்பழகன்'' என அழைக்கப்பட்டு வந்தார்.....

கடந்த 1977-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை 43 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்துள்ளார். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவையொட்டி பள்ளிக்கல்வித் துறை வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளதுடன் அங்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது.....
இந்நிலையில்,தி.மு.கழக பொதுக்குழு முடிவின்படியும்.தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டு, ஆலோசனைகளின்படியும், டிச.16. வெள்ளிக்கிழமை நேற்றுமாலை
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவை யெட்டி, மாபெரும் பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்அமைச்சர் கீதாஜீவன் பேசுகையதாவது.....

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பணியை பாராட்டும் வகையில் கல்வி இயக்க வளாகத்திற்கு அன்பழகன் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. திராவிட' சுய மரியாதை கொள்கைகளுடன் தி.மு.கழகத்தையும் பகுத்தறிவையும், வளர்த்து தந்தைபெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என 50 ஆண்டு நட்பு கருத்துகளை பரிமாறி ஆதிக்க சக்திகளை எதிர்த்து தமிழன் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாடுபட்டவர் இனமானபேராசிரியர்.
இது போன்ற வரலாறுகளை எல்லாம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் தனது கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாமல் கோமாளிதனமாக சிலர் பேசி வருகின்றனர்....

திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டுநாங்கள் சொல்ல தயார். மோடி ஆட்சியின் சாதனைகளை சொல்ல இங்கு தயாரா? வேலை வாய்ப்பு இல்லை உரிமைகள் பறிப்பு அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு விற்பனை செய்தது, பொருளாதார, பணமதிப்பிழப்பு, வீழ்ச்சி இது தான் உங்கள் சாதனை, ஜாதி, மதம், பாசிச சிந்தனைகள் போன்றவற்றை பயன்படுத்தி தமிழ்நாட்டில்,குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்....

அது ஒருபோதும் இங்கு,நடக்காது தி.மு.கழக ஆட்சியில் கல்வி வேலை வாய்ப்பு மகளிர் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், என அனைத்து தரப்பினரும் பயன் அடையும் வகையில், அடுக்கடுக்கான பல்வேறு நல
திட்டங்களை, கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிறைவேற்றி, அனைத்து தரப்புமக்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில், சிறப்பாக மக்களுக்கான உண்மையான பணிகளையாற்றி வருகிறார்.
மாற்று திறனாளிகளின், நிலையறிந்து, அவர்களுக்கு வழங்கப்படும், உதவிதொகையில்,௹500 உயர்வு தொகை கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து, பள்ளி கல்வி தொடங்கி - கல்லூரி பயிலும் வரை இலவச கல்வி. பெண்கல்வி ஊக்கத் தொகை. என்று தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது........

தி.மு. கழகத்தின் சார்பில்,19ம் தேதி நூறாண்டு நிறைவு தினம் கொண்டாடப்படுகிறது. 43 ஆண்டுகாலம் கட்சியின் பொதுச்செயலாளர் 4 முறை அமைச்சர் என எளிமையாக.கழக பணியாற்றியவர், பேராசியர் க.அன்பழகன். ஓருமுறை சட்டமன்ற படஜெட் கூட்ட தொடரின் போது அவரது சட்டை பை பக்கம் கிழிந்திருந்தது.. அதை பலரும் சுட்டி காட்ட தயங்கிய நேரத்தில் நான் தெரிவித்த போது, நான் வயது முதிர்ந்தவன் தானே பரவாயில்லை இருக்கட்டும் என்று இயல்பாகவும், எளிமையாகவும் கூறினார்.
இந்தியா அனைத்து மொழிகளை கொண்ட பன்முக தன்மை கொண்ட நாடு அதில் ஒரு மொழியை மட்டும் கட்டாயமாக திணிக்கப்படுவதை தான் எதிர்க்கிறோம். தமிழகத்தில் இரு மொழி கொள்கை என்பதுபோதுமானது தான், ஆங்கிலம் படித்த சுந்தர்பிச்சை, முன்னாள் ஜானாதிபதி அப்துல்கலாம் போன்றவர்கள் உலக அளவில்,சாதனை படைத்துள்ளனர்.

தந்தைபெரியார், தொடர்ந்து வலியுறுத்திவந்த சொத்தில் சமஉரிமை பெண்களுக்கு என்ற லட்சியத்தினை முன்மொழிந்ததை, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நிறைவேற்றி வைத்தார். 33 சதவீத் இட ஓதுக்கீடு பெண்களுக்கு அதனால்தான் வழங்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி, படிப்பு. எதற்கு என்று கூறிய காலத்தை மாற்றி அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது....
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 உறுப்பினர்களில் எத்தனை பேர் பெண்கள் என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கேட்டேன். 32 பேர் உள்ளார்கள் என்று கூறினார். 50 சதவீதத்தை கடந்து விட்டது என்றேன். பொது வார்டில் கூடுதலாக இரண்டு பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், திட்டங்கள் என்பதை பெயரளவுக்கு மட்டுமே காட்டிகொண்டு, கஜானாவை சுத்தமாக துடைத்துவிட்டார்கள்.
விதை நெல் இருந்தால் தானே விதைக்க முடியும் அதுவும் இல்லாத நிலை தற்போது,
முதல்வர் பதவியேற்ற 18 மாதம் காலத்தில் நிதிநிலையை சீர்செய்து ஒவ்வொன்றாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். எங்கு எப்போது, வெடிகுண்டுஅசாம் பாவிதங்கள், வன்முறை, மதநல்லிணக்கத்திற்கு எதிரான
சம்பவங்கள், பற்றி, பா.ஜ.க.அண்ணாமலைக்கு மட்டும், முன்னரே,எப்படி தெரிகின்றது என்பது புதிராகவே உள்ளது.....

அதேபோல எடப்பாடிக்கு 160 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தப்படுவது தெரிகிறது. இதிலிருந்தே திருடர்கள் யாரென்று உங்களுக்கு புரிகிறதா? ஓரு பொருளை காவல்துறை பிடித்ததும் அவர்கள் மதிப்பீடை பின்னர் தான் தெரிவிப்பார்கள் எடப்பாடிக்கு மட்டும் முன்கூட்டியே எப்படி தெரிகிறது. இரண்டு பேரும் கூட்டு சதிசெய்து, மக்களை குழப்ப முயலுகின்றனர். அதே போல் பாரளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 5லட்சம் கோடி போதை பொருள் பிடிப்பட்டதாக தெரிவித்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேள்வி கேட்ட நபருக்கு அப்படி எதுவும்பிடிபட்டதாக நான் கூறிவில்லையே என்று பதில் தெரிவிக்கப்பட்டது. துறை முகங்கள் வாயிலாகதான் போதை பொருள் கடத்தப்படுகிறது. அனைத்து துறைமுகங்களும் ஒன்றிய அரசின்கட்டுப்பாட்டில் தான் உள்ளது. குஜராத்தில் தனியார் துறைமுகம் ஒன்று இருக்கிறது. இதுபோன்ற கடத்தல் சம்பவங்கங்கள் நடைபெறுகிறது என்றால் இதில் யார் குற்றவாளி?
எடப்பாடி ஆட்சி காலத்தில் சாத்தான்குளத்தில் இரண்டு பேர் அடித்து கொல்லப்பட்டு 15 நாள் அந்த காவல் நிலையம் தாசில்தார் கஷ்டடியில் இருந்ததும், அப்பாவி மக்கள், 13 பேரை தூத்துக்குடி சம்பவத்தில் சுட்டு கொல்லப்பட்டதும்தான் சாதனை.
இதை தவிர 45 அடி தூரம் ஊர்ந்தே சென்று காலை தொட்டு பதவி வாங்கியவர்தான். எடப்பாடி என்பது, அவர்களது கட்சியினராலேயே விமர்சிக்கப்பட்டுவருகின்றது...

இந்த தொகுதியில் நிறைவேறாமல் இருந்த குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவு தளம், இஎஸ்ஐ மருத்துவமணை ஆகிய பணிகளை, தி.மு.கழக துணை பொதுச்செயலாளர், தூத்துக்குடி. எம்.பி.கவிஞர் கனிமொழி தூரிதப்படுத்தியதால் அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் அதில் வரும் வருமானத்தை வைத்தே ஓரு மாநில அரசு பட்ஜெட் போட்டுவிடலாம். அதை திட்டமிட்டே, தமிழகம் வளர்ச்சியடைக் கூடாதென்று, கிடப்பில் போட்டு வைத்துள்ளார்கள். இவ்வாறாக அவர் பேசினார்.




Comments