பேராசியர் விழா! தமிழக மக்கள் நல திட்டங்களை ஆளுநர் ரவி கிடப்பில் போடுவதுஏன்!!கனிமொழி.எம்.பி. கேள்வி?
- உறியடி செய்திகள்

- Dec 18, 2022
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தடைகல்லாக, தமிழக அரசு மக்கள் நலதிட்டங்களை ஆளுநர் ஆர்.என் ரவி கிடப்பில் போட்டு வைத்துள்ளது ஏன்? என்று, கவிஞர் கனிமொழி கருணாநிதி, எம். பி.கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். இவரது நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றே பேராசிரியர். க அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் குழுத்துணைத்தலைவர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழிகருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது......
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின்முதல்வர் தளபதியாரின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது....

பேராசிரியரை போன்ற ஒரு தலைவரை மீண்டும் நாம் பார்ப்பது ரொம்பவே கடினம். அவர் தன்னை பற்றி எந்தவொரு விமர்சனங்கள் வந்தாலும் கோபப்பட மாட்டார். அதேநேரம் தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சிறு இழுக்கு வந்தால் கூட கோபத்தில் பொங்கி எழுந்துவிடுவார். முத்தமிழறிஞர் கலைஞரின் சகோதராக கழகத்திலும், கழக ஆட்சியிலும் மிகவும் சிறப்பாக பணியாற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்களிடம் நன்மதிப்பையும், மரியாதையும், அன்பையும் பெற்றவர்.

பா.ஜ.க.வால் ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில், அவர்கள் ஆளுநர்கள் மூலம் ஆட்சியை முடக்க முயல்கிறார்கள்.. அங்கெல்லாம்,ஆர்.எஸ்.
எஸ் அமைப்பை, சங்பரிவார அமைப்புகளை வலுப்படுத்த முயல்கிறார்கள்.....
தமிழக ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் தர மறுக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகப் பல முறை முதல்வர் தளபதியின் ஆலோசனைகளின்படி தமிழ்நாட்டின் சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளித்துவிட்டார். இருந்த போதிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.
மாநில அரசுகள் மக்களுக்கு, அவசியமான திட்டங்களையும், எந்தவொரு நன்மையும் செய்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான். பா.ஜ.க. ஆட்சிஇல்லாத மாநிலங்களில் இவர்கள் ஆளுநர்களை நியமித்து உள்ளனர்......


தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு குறைந்து விட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், இங்குத் தமிழ்நாட்டில் இந்தி மொழியை எவராலும்,திணிக்க முடியாது. இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும், காரணங்களும், தமிழ்நாட்டு மக்களிடம் இன்னும் நீர்த்துப் போகவில்லை.. .
தாய்மொழியான தமிழ்மொழியின் மீது உண்மையான பற்றுக்கொண்ட சூடு சொரணை உள்ளவர்களுக்கு இந்தி மொழி எந்த வடிவத்தில் வந்தாலும், அதனை எதிர்ப்பது என்பது என்றுமேகுறையாது என்று நமது இனமானபேராசிரியர் அன்பழகன் அடிக்கடி கூறிப்பிடுவார்..
இப்படி, தமிழ்மொழி பற்றியும், தமிழர்களின் கலாச்சாரம்பண்பாடுகள் பற்றியும்
இங்கு எதுவும் அறியாத சிலர், திராவிட ஆட்சி என்ன செய்த என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ந்து உள்ளது. இதற்குப் பின்னால் இருப்பதே திராவிட ஆட்சி தான். நாட்டிலேயே மருத்துவ கல்வியில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது. இதுதான் திராவிட மாடல்... இதை உடைக்கவே நீட் நுழைவுத் தேர்வை தொடர்ந்து கொண்டுவருகின்றது.

ஒன்றிய பா.ஜ.க அரசு . 2ஜி விவகாரத்தை வைத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், உண்மைக்கு புறம்பான அபாண்டமான குற்றசாட்டுக்களை வாரி வீசி, நம்மை விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது நீதிமன்றமே உண்மைகளை அறிந்து 2ஜி வழக்கு புனையப்பட்ட பொய் வழக்கு என்று கூறிவிட்டது.
கடந்த 8 ஆண்டுகளில், பா.ஜ.க. ஒன்றிய அரசு விலைவாசிகளை விண்ணை முட்டுமளவுக்கு உயர்த்தியோடு, ஏழை எளிய மக்களின் வாழ தேவையான அத்தியாவச பொருட்களின் மீது வரிக்குமேல்வரியை போட்டு, ஏழை மக்களின் வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, பெட்ரோல், டீசல் விலையை ஒன்றி அரசு குறைப்பது இல்லை. விலைவாசி உயர்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களைசாதி . வாரியாகவும், மதம் வாரியாகவும் பிரித்து சுய அரசியல் லாபம் அடையவும். இந்துத்துவா, சனாதானத்தை தூக்கி பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக பாஜக இறங்கியுள்ளது. ஒன்றிய அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தைக். கொண்டு வந்த போது அதற்கு ஆதரவு அளித்தது, இங்கு எதிரக்கட்சியாக உள்ள எடப்பாடி அதிமுக தான்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி கட்டில் இருந்தவரை எந்தவொரு தொழில் வாய்ப்புகளையும், மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், கல்வி. வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற எந்த நடவடிக்கையிலும் அவர்கள் முனைப்புடன் ஏற்படுத்தித் தரவில்லை. ஆனால், தி.மு.கழகம் கழகத் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கு வந்த உடன் இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது தி.மு.கழக அரசு' தொடர்ந்து தமிழ்மொழி, தமிழர்களின் நலன், வாழ்வாதாரம், காக்கும் வகையில், கழகத் தலைவர் தளபதியாரின் தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கான அரசாக, திராவிடல் மாடல் ஆட்சியை முன்னெடுத்து மக்களுக்கு பணியாற்றும், இவ்வாறாக அவர் பேசினார்..
அமைச்சர், செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர். கிளை, வார்டு கழக நிர்வாகிகள், அனைத்துத் தரப்பு மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.




Comments