முதல்வரின் தலைமையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள்! அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Dec 1, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா...
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்....
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியை அடுத்த ரெட்டிமாங்குடி, லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளா சேர்ந்த 109 ஊரக குடியிருப்பு பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குழாய் மூலம், கொண்டு வரும் ரூ.248.59 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்திட்டத்தை, தி.மு.
கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கிவைத்தார்......,

பின்னர்பல்வேறு அரசுத்துறைகளின் மூலம் ரூ.36.84. லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் அமைச்சர்.கே.என்.நேரு பேசியதாவது......
தி.மு.கழகத் தலைவர் தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலானஅரசு கிராம மக்களுக்கு பாதுகாத்தப்பட்ட தூய்மையான குடிநீரை வழங்க நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.8.500 கோடி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார்கள்-ஒன்றிய அரசு. ரூ16. ஆயிரத்து,500 கோடியை ஒதுக்கிடுசெய்துள்ளது..

ஜெர்மன் - மற்றும் நபார்டு கடன்மூலம் ரூ.15. ஆயிரம் கோடி மதிப்பீட்டில், இந்த ஆண்டு மக்க ளுக்கான திட்டப்பணிகளை முதல்வரின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட உள்ளது.
மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொண்டு வந்து சப்ளை செய்வதற்கு, தமிழ்நாடு. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, சுமார் ரூ.21. செலவாகிறது.......
அதற்கு ஊராட்சிகள் ரூ.11.மட்டுமே வழங்குகிறது, மீதத்தொகையை அரசே ஏற்றுக்கொள்கிறது.

2006-2011. தி.மு.கழக ஆட்சியின்போதும் திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பல கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.கழக ஆட்சி தளபதி, முதல்வர். மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் தொடர்ந்து திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவும் - ஒத்துழைப்பும் வழங்க வேண்டும், இவ்வாறாக அமைசசர்.கே.என்.நேருபேசினார்......

தொடர்ந்து ரெட்டிமாங்குடியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், 10.ஏக்கர் நிலப்பரப்பில் மிய வாக்கி முறையில், குறுங்காடுகளை உருவாக்கும் திட்டத்தை மரம் கன்று நட்டு தொடங்கிவைத்தார்.
லால்குடி, பெருவளப்பூரில் ரூ.25 -லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.

லால்குடியை அடுத்த புள்ளம்பாடியில் ரூ.17.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குறுவட்ட அளவையாளருக்கு கான குடியிருப்புடன் கூடிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்தார்.....
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், சௌந்தரபாண்டியன், கதிரவன். கலெக்டர் பிரதீப்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தார்கள்.




Comments