top of page
Search

பொதுத்துறைகள் தனியார்மயமாக்கம்! மோடியின் படாடோ படமும்- கசப்பான உண்மைகளும்!! ஓர் ஆய்வு பார்வை!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Oct 23, 2022
  • 4 min read
ree


அரசு பொதுத்துறைகள், தனியார்மயக்கமு .ம், மோடியின் படாடோபமும் கசப்பான உண்மைகளும் -


பிஎஸ்என்எல் செயல்படத் தவறினால் மூடப்படும் என்று பிரதமர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம், பிஎஸ்என்எல்லின் மறுமலர்ச்சி குறித்து உயர்ந்த கூற்றுக்களை முன்வைக்கும் அரசாங்கம், மறுபுறம், பிஎஸ்என்எல்லின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான தடைகளை உருவாக்குவதோடு, நிறுவனத்திற்கு திருப்பி வழங்க வேண்டிய நிதியை தராமல் நிதி நெருக்கடிக்குள் தள்ளுகிறது. பிஎஸ்என்எல்-ஐ செயலற்ற நிறுவனமாக மாற்றி, இறுதியில் மூடிவிட, அரசாங்கம் மறைமுகத் திட்டங்களைக் கொண்டுள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மீட்டெடுக்க 1.64 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை டமாரம் அடித்துள்ளது. இந்த இரண்டாவது பண உதவித் தொகுப்பு ஜூலை 27, 2022 அன்று அறிவிக்கப் பட்டது. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்பதற்காக, இதேபோன்ற மறுமலர்ச்சி பணத் தொகுப்பை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில் இரண்டு பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறு வனங்களை மீட்டெடுக்க, 70,000 கோடி ரூபாய் செலவிடு வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.பிஎஸ்என் எல்-ன் மறுமலர்ச்சிக்காக, மக்களின் வரிப் பணத்தில் பெரும் தொகையை, அரசாங்கம் விரயமாக்குகிறது என்னும் உரத்த செய்தி, நாட்டின் பொது மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது. உண்மை யில் பிஎஸ்என்எல்-ஐ மீட்டெடுக்க, வரி செலுத்து வோரின் பணத்தில் இருந்து அரசாங்கம் எவ்வளவு செலவு செய்கிறது?

ree

4ஜி சேவை வழங்கப்படாததற்கு பிஎஸ்என்எல்தான் காரணமா?

மீட்புத் தொகுப்புகளின் ஒரு முக்கிய அம்சம் பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாகும். அக்டோபர் 23, 2019 அன்று அறி விக்கப்பட்ட முதல் மீட்புத் தொகுப்பில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக, ரூ.23,814 கோடி செலவிடுவதாக அரசாங்கம் உறுதிய ளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும், பிப்ரவரி, 2022இல், நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் பிஎஸ்என்எல்லின் ‘தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு’ ரூ.44,000 கோடி செலவிடப்படும் என்று அறிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மீட்புத் தொகுப்பில், பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக, அரசாங்கம் 44,993 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் அனைத்தையும் சேர்த்தால் 1,12,807 கோடி ரூபாய் கிடைக்கும்.


காகிதத்தில் மட்டுமே......


அரசு இவ்வளவு பெரிய தொகையினை வழங்கிய போதும், பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை இன்று வரை தொடங்க இயலவில்லை என்பதை அறிந்து நாட்டு மக்கள் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அக்டோபர் 23,2019 அன்று அரசாங்கம் அறிவித்த முதல் மறு மலர்ச்சி தொகுப்பு காகிதத்தில் மட்டுமே உள்ளது. முதல் மறுமலர்ச்சி தொகுப்பின் அடிப்படையில் அர சாங்கம் செய்த ஒரே விஷயம், விருப்ப ஓய்வு அறிமுகம் செய்ததின் மூலம் 80,000 ஊழியர்களை வேலையிலி ருந்து வீட்டுக்கு அனுப்பியதுதான். பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான அரசின் முக்கியமான உறுதிமொழி இன்றுவரை காகிதத்தில் மட்டுமே உள்ளது. பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையைத் தொடங்குவ தைத் தடுக்க, அரசாங்கம் இரண்டு பெரிய தடைகளை உருவாக்கியுள்ளது. பிஎஸ்என்எல் வசம் ஏற்கனவே இருக்கும் கருவிகளை மேம்படுத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டது முதல் தடை. பிஎஸ்என்எல் நிறுவனம் தனக்கு சொந்தமாக, 49,300 3ஜி பி.டி.எஸ் (Base Transceiver Station) கருவிகளைக் கொண்டுள்ளது. அவைகளின் மென்பொருளை மேம் படுத்துவதன் மூலம் 4ஜி பி.டி.எஸ்களாக மாற்ற இயலும். ஆனால் இதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த மேம்படுத்தும் பணி அரசால் அனுமதிக்கப் பட்டிருந்தால், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியிருக்க முடியும்.

ree

இல்லாத நிறுவனத்திடம் வாங்க அனுமதி

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறு வனங்கள் வாங்கியது போல, உலகளாவிய விற்பனை யாளர்களிடமிருந்து பிஎஸ்என்எல் தனது 4ஜி கருவி களை வாங்குவதற்கு அனுமதி மறுத்தது அரசாங்கத் தால் உருவாக்கப்பட்ட அடுத்த தடையாகும். மார்ச் 2020 இல், பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000 4ஜி பி.டி.எஸ்களை வாங்குவதற்கான டெண்டரை வெளி யிட்டது. இருப்பினும், இந்த டெண்டரை ரத்து செய்யும் படி அரசாங்கம் பிஎஸ்என்எல்-ஐக் கட்டாயப்படுத்தி யது. அத்தோடு பிஎஸ்என்எல், அதன் 4ஜி கருவிகளை இந்திய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், உலகளாவிய விற்பனையாளர்களிட மிருந்து வாங்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

அதன் பிறகு, பிஎஸ்என்எல்-க்கு 4ஜி கருவிகளை வழங்குவ தற்காக டிசிஎஸ் நிறுவனம் (Tata Consultancy Services) அடையாளம் காணப்பட்டது. ஆனால், 4ஜி உபகரணங்களை வழங்குவதற்குத் தேவையான தொழில்நுட்பம், தன்னிடம் உள்ளது என்பதை இன்று வரை டிசிஎஸ் நிறுவனத்தால் நிரூபிக்க முடியவில்லை. பிஎஸ்என்எல்-க்கு டிசிஎஸ் எப்போது 4ஜி கருவிக ளை வழங்க முடியும் என்பது யாருக்கும் தெரியாது!

அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை

மறுமலர்ச்சி மீட்புத் தொகுப்பில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலதனச் செலவினங்களுக்காக நான் காண்டுகளுக்கு, அரசு ரூ.22,471 கோடியை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவ னத்துக்கு அரசு திருப்பித் தர வேண்டிய ரூபாய் 38,540 கோடியை இன்னமும் வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் ஏற்கனவே இது குறித்து தொலைத்தொடர்பு துறையிடம் (Dot) கோரி யுள்ளது. இந்தத் தொகையை பிஎஸ்என்எல் நிறுவ னத்துக்கு திருப்பிச் செலுத்தக் கோரி பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வரு கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட உள்ள ரூ.22,471 கோடி என்பது பிஎஸ்என்எல்-க்கு அர சாங்கம் ஏற்கனவே தர வேண்டிய நிலுவைத் தொகை யை விட மிகவும் குறைவு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ரூ.13,789 கோடியை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு “சாத்தியமான வருமான இடைவெளி நிதி” (Viability Gap Funding) யாக அரசாங்கம் வழங்கும் என்றும் மறு மலர்ச்சித் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த “சாத்தியமான வருமான இடைவெளி நிதி” என்றால் என்ன? பிஎஸ்என்எல், நாட்டின் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இந்திய அரசின் சார்பில் தொ லைத் தொடர்புச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த சேவைகள் வணிகரீதியாக பிஎஸ்என்எல் நிறுவ னத்திற்கு லாபமற்றது. எனவே, இந்தச் சேவைகளை வழங்குவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை அரசே ஈடுகட்ட வேண்டும். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பே, 13,789 கோடியை இழப்பீடாக திருப்பித் தருமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் அரசாங் கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

ree

இத்தொகையை திரும்ப வழங்கக் கோரி தொழிற்சங்கங்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்தின. ஆனால் இப்போது, இந்தத் தொகையை பிஎஸ்என்எல்-க்கு திருப்பித் தருவது, மறுமலர்ச்சி தொகுப்பின் கீழ் பெரிய மனதுடன் பிச்சை யிடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிபிஎன்எல் நிறுவனமும் தனியாருக்கு

மறுமலர்ச்சி தொகுப்பில் அறிவித்தபடி, அரசுக்குச் சொந்தமான கண்ணாடி இழை புதைவட (Optic Fiber Cable) நிறுவனமான பிபிஎன்எல், பிஎஸ்என்எல் உடன் இணைக்கப்படும். மீண்டும், இது தவறான செய்தியே தவிர வேறில்லை. பிபிஎன்எல்-லின் உரிமை யானது அரசாங்கத்திடம் தொடர்ந்து இருக்கும் என்றும், அனைத்து தனியார் நிறுவனங்களும் அதன் கண்ணாடி இழைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உண்மையில், பிபிஎன்எல்-ஐ செயல்படுத்துவது மற்றும் பராமரிப்பது மட்டுமே பிஎஸ்என்எல் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எதிடல காலத்தில் பிபிஎன்எல் நிறுவனத்தை தனியார் நிறுவ னங்களிடம் ஒப்படைக்க, அரசாங்கம் அதன் கதவு களை அகலத் திறந்தே வைத்திருக்கிறது.

ஓய்வூதியப் பங்களிப்புக்கு கூடுதலாக வசூலித்த தொகையினை வழங்குக!

‘ஓய்வூதியப் பங்களிப்பு’ என்ற பெயரில் பிஎஸ் என்எல் நிறுவனத்திடம் இருந்து ஆண்டுதோறும் கூடுதல் பணத்தை அரசு பறித்து வருகிறது. இது நிறு வனத்தின் நிதி நிலையை பாதிக்கும் ஒரு முக்கிய மான காரணியாகும். அரசுத் தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, பொதுத்துறை பிஎஸ்என்எல்-க்கு மாற்றப்பட்ட ஊழியர்கள் அரசாங்க ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள், இதற்காக பிஎஸ்என்எல் ஒவ்வொரு ஆண்டும், அரசாங்கத்திற்கு ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்த வேண்டும். இந்த ஓய்வூதியப் பங்களிப்பு பிஎஸ்என்எல் ஊழியர்களின் அதிகபட்ச ஊதிய விகிதத்தில் கணக்கிடப்படுகிறது. அதேசமயம் மீதமுள்ள ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதி யப் பங்களிப்பு உண்மையான அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஓய்வூதியப் பங்களிப்பு என்ற பெயரில், பிஎஸ்என்எல் நிறுவனத்தி டம் இருந்து கூடுதல் பணம் பறிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், கூடுதலாக வசூலித்த பணத்தை, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் திரும்ப வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

ree

இது குறித்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மறுமலர்ச்சி மீட்புத் தொகுப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மறுமலர்ச்சி தொகுப்பின்படி, சந்தையில் வெளி யிடப்படும் பத்திரங்கள் மூலம் ரூ.40,399 கோடியை திரட்ட பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவாதத்தை (sovereign guarantee) வழங்கும். இது நிறுவனத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும். அதே நேரத்தில், இந்த 40,399 கோடி ரூபாயும், அதற்கான வட்டியும் பிஎஸ்என்எல் நிறுவனத்தால், திருப்பிச் செலுத்தப்படும் என்றும், அது மக்களின் வரிப் பணத்தில் திருப்பிச் செலுத்தப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடமாக்கி விட்டு பந்தயத்தில் ஓடச் சொல்லும் குரூரம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீட்பு நடவடிக்கைக ளுக்கு மக்களின் வரிப் பணத்தில் இருந்து அரசாங்கம் எதையும் செலவிடப் போவதில்லை என்பது இவை அனைத்திலிருந்தும் தெளிவாகிறது. அதே நேரத்தில், ஜூலை 27, 2022 அன்று அரசாங்கத்தால் அறிவிக்கப் பட்ட மறுமலர்ச்சித் தொகுப்பானது, “செயல்படு அல்லது அழிந்துபோ” என்கிற விதத்தில் உள்ளது. பிஎஸ்என்எல் செயல்படத் தவறினால் மூடப்படும் என்று பிரதமர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம், பிஎஸ் என்எல்லின் மறுமலர்ச்சி குறித்து உயர்ந்த கூற்றுக் களை முன்வைக்கும் அரசாங்கம், மறுபுறம், பிஎஸ் என்எல்லின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற் கான தடைகளை உருவாக்குவதோடு, நிறுவனத்திற்கு திருப்பி வழங்க வேண்டிய நிதியை தராமல் நிதி நெருக்க டிக்குள் தள்ளுகிறது.

ree

பி.எஸ்என்எல்-ஐ செயலற்ற நிறுவனமாக மாற்றி, இறுதியில் மூடிவிட, அரசாங்கம் மறைமுகத் திட்டங்களைக் கொண்டுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.


கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,


நன்றி : பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 1-7, 2022),

தமிழில்: செல்வம் அருணாசலம், புதுச்சேரி.


மீள்பதிவு பி.அபிமன்யு. புதுச்சேரி

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page