புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதி! தி.மு.கழக உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்! அமைச்சர் மெய்யநாதன் பாராட்டு!
- உறியடி செய்திகள்

- May 19, 2023
- 2 min read

மணவை.எம்.எஸ்.ராஜா....
ஆலங்குடி தொகுதியில்
திமுக கழகத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு
அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரம் சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கட்சியின் கிளைக் கழக செயலாளர் நெடுவாசல்மேற்கு எம். பழனிவேல் ,விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அணவயல் சுபம் சங்கர் ஆகியோர் அதிக உறுப்பினர்களை சேர்த்ததால் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
திமுக-வில் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை, தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மறைந்த முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜுன் 3ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் புதிதாக 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி திமுக பயணிக்க துவங்கி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான களப்பணியில் தமிழக அரசியல் கட்சிகளும் இறங்கிவிட்டன.. மாறி மாறி ஆட்சி செய்யும், திராவிட கட்சியான திமுக மற்றும் அதிமுக இடையேயான போட்டிகள் ஒவ்வொருமுறையும் வெளிப்படும்..
அந்தவகையில், தமிழகத்தை யார் கைப்பற்ற போவது என்ற போட்டி இந்த முறையும் கிளம்பி உள்ளது.. எனவே இரு தரப்பிலுமே கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2 மாதங்களில் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த அந்த பகுதியில் நடத்தப்பட்டும் வருகிறது. அத்துடன், சேர்க்கை முகாம்கள், தெருமுனைப் பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த உள்ளனர்.
யார் யார் சேர்க்கை?
சில நாட்களுக்கு முன்பு, தி.மு.கழக பொதுச்செயலாளர் துரைமுருகன்ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த வழிகாட்டு நெறிமுறையில், 'கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும், உறுப்பினர் கட்டணமாக ரூ.10 செலுத்தவேண்டும். உறுப்பினர் சேர்க்கை படிவத்துக்கான கட்டணம் படிவம் ஒன்றுக்கு ரூ.25 ஆகும், உறுப்பினர்களை அவர்கள் குடியிருக்கும் முகவரியிலோ அல்லது தொழில் செய்யும் முகவரியிலோ உறுப்பினராக சேர்க்கலாம்.. அப்படி உறுப்பினராக சேர விரும்புவோர் உறுப்பினர் படிவத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை கட்டாயம் குறிப்பிடுவதுடன், வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயர், எண், போட்டோ உள்ள முதல் பக்கத்தினை நகல் எடுத்து இணைக்கவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.உறுப்பினர்களை சேர்க்கும் பணிதான் இன்று கையில் எடுக்கப்பட்டுள்ளது.. மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க, அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி 'உடன்பிறப்புகளாய் இணைவோம்' என்ற இந்த திட்டத்தில், திமுகவினர் ஆர்வமாக களமிறங்கி உள்ளனர்.
இதன் காரணமாக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொண்டர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து வருகிறார்




Comments