புதுக்கோட்டை: கண்மாய் சீரமைப்புபணி!அதிகாரிகள்விரைந்து செயல்பட அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- May 2, 2023
- 1 min read

புதுக்கோட்டை பொன்னாச்சி கண்மாய்
ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி அமைச்சர் .ரகுபதி
துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பெருங்குடி கிராமத்தில் உள்ள பொன்னாச்சி கண்மாய் தூர்வாரும் பணியினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது.....
தி.மு.கழகத்தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியார்,
பொதுமக்கள்
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் பாசன ஆதாரங்களை தூர்வாரிட, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் 96.69 கி.மீ நீளத்திற்கு பாசன ஆதாரங்களைத் தூர்வாரிட, தஞ்சாவூர் கல்லணைக் கால்வாய் கோட்டம், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக்கோட்டம், புதுக்கோட்டை தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்டம் ஆகிய 3 கோட்டங்கள் வாயிலாக 31 பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.


அந்தவகையில் இன்றைக்கு திருமயம் வட்டம், பெருங்குடி கிராமத்தில் உள்ள பொன்னாச்சி கண்மாய் ரூ.7 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்மாயின் நீளம் 3,700 மீட்டர் ஆகும். இக்கண்மாயின் மூலம் 174.06 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த கண்மாயினை தூர்வாருவதன் மூலம் அதிக அளவிலான தண்நீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்வதற்கு வழிவகை ஏற்படும், மேலும் இந்த நீரினைக் கொண்டு விவசாயம் மேற்கொள்வதற்கும் பயன்படுத்த ஏதுவாகிறது. இந்த பொன்னாச்சி கண்மாய் தூர்வாரும் பணியினை தொடர்புடைய அலுவலர்கள் விரைவாகவும், நல்ல முறையிலும் மேற்கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும், எல்லாம் என்கிற லட்சியத்தின் அடிப்படையில், முதல்வர் தளபதியின் மக்களுக்கான தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறாகஅமைச்சர்
.எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் .மேகலாமுத்து, வருவாய் கோட்டாட்சியர் .முருகேசன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) கனிமொழி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, உதவிப் பொறியாளர்கள்
.கமலேஸ்வரி
.இளையராஜா, ஊராட்சிமன்றத் தலைவர் .என்.சுப்பிரமணியன், பழனியப்பன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள், தி.மு.கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




Comments