புதுக்கோட்டை: மக்கள் நீதிமன்றத்தில் ரூ.79.90.க்கு சமரசதீர்வு!
- உறியடி செய்திகள்

- Jun 10, 2023
- 1 min read

மணலை எம்.எஸ்.ராஜா.....
புதுக்கோட்டை மக்கள் நீதிமன்றத்தில் லோக் அதாலக் ரூ. 76.90 லட்சம் தீர்வு காணப்பட்டது
புதுக்கோட்டையில்தேசிய சட்டப் பணி குழு ஆணையம் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுபடியும் புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி நாராயணன் வழிகாட்டுதலின் படியும் அறிவு சார் சொத்து உரிமைகள் நுகர்வோர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் லோக் அதாலக் நடைபெற்றது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு புதுக்கோட்டை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயந்தி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளர் சார்பு நீதிபதி ராஜேந்திர கண்ணன் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பூரணிமா ஆகிய நீதிபதிகல் கொண்ட ஒரு அமர்வும், கீரனூர் தாலுகா நீதிமன்றத்தில் ஒரு அமர்வும், என இரண்டு அமர்வுகளில் நிலுவையில் உள்ள அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் நுகர்வோர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விபத்து இழப்பீடு வழக்குகள் என சுமார் பத்து வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டு சுமார் ரூபாய் 76.90,000 லட்சம் வழக்குக்கான சமரசம் ஏற்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது




Comments