top of page
Search

புதுக்கோட்டை பொற்பனை கோட்டை அகழாய்வு பணிகள்! அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 22, 2023
  • 2 min read
ree

மணவை எம்.எஸ்.ராஜா....


புதுக்கோட்டை அருகே தொல்லியியல் துறை ஆய்வு பணிகள்! அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் ஆனது வேப்பங்குடி பஞ்சாயத்தில் அமைந்துள்ளது புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் சார்ந்த இடங்களில் இது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது இக்கோட்டையானது 17 .75. 66 ஏக்கர் பரப்பளவிலும் கோட்டைக்குள் 1.26 ஏக்கர் பரப்பளவில் வாழ்விடப் பகுதியாகவும் உள்ளது இவ்வாழ்விடப் பகுதியின் காலமானது இரும்பு காலத்தில் தொடங்கி பிற்காலம் வரை தொடர் தொடர்கிறது இப்பகுதியில் இருந்து இரும்பு கால ஈமச்சின்னங்கள் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வரலாற்றுக்கு முந்தைய செங்கற்கள் கண்டறியப்பட்டன தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தால் 2021 ஆம் ஆண்டு இனியன் தலைமையில் அகழ்வாய்வு இவ் அகழாய்வு தமிழி எழுத்து பொறிப்புகளைக் கொண்ட பானை ஓடுகள் சதுரங்க ஆட்ட காய்கள் சங்கு வளையல்கள் எலும்பு ஆயுதங்கள் மற்றும் வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டன.

ree

தமிழி எழுத்துப் பொறிப்பு பெற்ற கி.பி .நாலாம் நூற்றாண்டுச் சேர்ந்த வீரக்கல் ஒன்று கண்டறியப்பட்டது இந்த வீரக்கல் கணங்குமரன் என்பவருக்காக எடுக்கப்பட்டாகும் பொன் கொங்கர் விண்ணக்கோன் காலத்தில் அதவனிரைச் சார்ந்த கணங்குமரன் என்பவர் ஆதிரைப் பூசலில் பசுக் கூட்டத்தைக் கைப்பற்றி இறந்தமைக்காக எடுக்கப்பட்டதாகும் கொங்கு என்ற வார்த்தையானது பொதுவாக கொங்கு நாட்டினை குறிப்பாக கருதுவர் அச்சொல் கல்வெட்டுகளில் பயின்று வருவது இதுவே முதல் முறையாகும் .

சிதலமடைந்த நிலையில் இருக்கும் கோட்டையின் காலமானது 13 -14 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்ததாக இருக்கக்கூடும் பொற்பனைக்கோட்டையின் பெயரானது பொன்பரப்பினான் என்ற அடைமொழியினை கொண்ட பாண அரச குலத்தை சார்ந்த குறுநில மன்னனால் கட்டியிருக்கக்கூடும் என்றும் பொற்பனை அல்லது பொன் பனை என்ற கிராமத்தின் பெயருடன் கோட்டை என்ற சொல் இணைந்து விற்பனைக்கோட்டை என அழைக்கப்படலாயிற்று என்ற இரு கருத்துக்கள் காணப்படுகின்றன கோட்டையானது 2..5 கிலோமீட்டர் சுற்றளவினை கொண்டுள்ளது பாதுகாப்பு அரணானது பரப்பளவில் 5.66 ஏக்கரிலும் ஒட்டுமொத்த கோட்டையானது 17.75.66 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மூன்று நுழைவு வாயிலினை (கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு) கொண்டதாக இக்கோட்டை உள்ளது. கோட்டையின் வடக்கு நுழைவு வாயிலானது செங்கற்களால் கட்டப்பட்டதாகும் கோட்டையின் வெளிப்புறத்தில் கிடைக்கும் செங்கற் கற்கள் மூன்று அளவுகளில் (44x2x11 செ.மீ. 42x21x10 செ.மீ. மற்றும் 36x18 x 40 செ.மீ.) காணப்படுகிறது மேற்பரப்பானது செம்புரான் கற்களை கொண்டு அமைக்கப்பட்டதாகும்

இக்கோட்டை 15 - 36 மீட்டர் அளவுடன் 32 கோட்டை கொத்தளங்கள் மற்றும் அதன் எச்சங்களை காணும் போது இக்கோட்டை மாளிகையுடன் இருந்திருக்க வேண்டும் என தெரிகிறது கோட்டையின் நான்கு புறங்களிலும் முனீஸ்வரன் மற்றும் கருப்பர் கோயில்கள் அமைந்துள்ளது கோட்டையின் உப்புறத்தில் நீரழிகுளம் அமைந்துள்ளது அதன் அருகில் வாழ்விடப் பகுதியானது கண்டறியப்பட்டது இங்கிருந்து கருப்பு சிவப்பு பானை ஓடுகள் சிவப்பு பானை ஓடுகள் மற்றும் கருப்பு பானை ஓடுகள் கண்டறியப்பட்டன பானை ஓடுகள் சிலவற்றில் கீறல்கள் மற்றும் தமிழ் பிராமி பொறிப்புகள் கிடைக்கின்றன இதனைத் தவிர கண்ணாடியினால் செய்யப்பட்ட மணிகள் வளையல்கள் பவள கற்கள் சுடுமண் பொருட்கள் இரும்பு உயரத்திற்கான சான்றுகள் கிடைக்க பெற்றன இரும்பினை உருக்கிய எச்சங்களானது கோட்டையின் தெற்கு பகுதியில் கண்டறியப்பட்டன இரும்புத் துண்டுகள் சுடு மண் குழாய்கள் கழிவுகள் கிடைத்துள்ளன இந்த இடம் தற்போது கரிமேடு என்று அழைக்கப்படுகிறது மேலும் செம்புறாங்கல் பாறையிலேயே வட்டம் நீள் வட்டம் வடிவிலான குழிகள் கருப்பு கருப்பு சிவப்பு சிவப்பு பானைகள் ஓடுகள் கண்டறியப்பட்டன!

ree

மேற்கண்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு மேலும் பல தொல்லியல் மற்றும் வரலாறு ஆதாரங்களை வெளிக் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படுகின்றது.

இந்த பொற்பனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வு பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் தொல்லியல் துறை இயக்குனர் எஸ் ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தலைமையில் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்


நிகழ்வில்மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page