புதுக்கோட்டை: அரசின் திட்டங்கள், மக்களை சென்றடைய வேண்டும்! அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்!
- உறியடி செய்திகள்

- Sep 7, 2023
- 1 min read
Updated: Sep 7, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
புதுக்கோட்டை , அருகே நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் திட்டங்கள் - மருத்துவ வசதிகள் நேரிடையாக மக்களை சென்றடையும் அதிகாரிகள் கவனமுடன், அக்கரையுடனும் பணியாற்ற வேண்டுமென்றும் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வளயுறுத்திக் கேட்டுக் கொண்டார்.!


தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்பட்டி, புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட, திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டை விடுதி ஊராட்சி மேலநெகமம் கோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி பகுதி சாலை மறுசீரமைப்பு பணிகள் வேங்கிட குளம் ஊராட்சியில் ரூ.25. லட்சம் மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்புப் பணி, கோவிலூர் ஊராட்சி மைக்கேல் பட்டி வரையிலான சாலை௹.19 லட்சம்மதிப்பீட்டிலும், !

வேங்கிடாகுளம்- வல்லத்திரகோட்டை, காடையன் தோப்பு சாலை௹ 29 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள், தெட்சிணாபுரம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.41. லட்சம் மதிப்பீட்டிலான மக்கள்நலப் பணிகள் வழங்கும் விழா!
புதுக்கோட்டை விடுதி ஊராட்சி, சூத்தியன் பட்டி சாலை௹, 14.40 லட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள், மாஞ்சான். விடுதி ஊராட்சியில் புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை சாலை முதல் வீரப்பட்டி வரை௹ 23. லட்சம் மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றின் பணி தொடக்கவிழா நேற்று செப்.6.புதன்கிழமை
ஆங்காங்கு நடைபெற்றது.

விழாவில் தமிழக காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் கலந்துகொண்டு அரசு நலத் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார்.!

பின்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர், அமைச்சர் சிவ.மெய்யநாதன் பேசுகையில், உரிய தரத்துடன் காலம் தாழ்த்தாமல் பணிகளை விரைவாக முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்றும், அரசு மருத்துவத்திட்ட உதவிகளும் நேரிடை.யாக எவ்விதமான தடைகளுமின்றி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் அதிகாரிகள் கவனமுடன். அக்கரையுடனும் கண்காணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் அமைச்சர் மெய்யநாதன்
வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.!


தொடர்ந்து கொத்தக் கோட்டை ஊராட்சி மக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட அதிக கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றியையும் மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து செரியூர் ஜமீன்ஊராட்சியில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் நடைபெற்ற மருத்துவ முகாமையும் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்து அரசின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.




Comments