top of page
Search

புதுக்கோட்டை, வேங்கை வயல் சம்பவம்! விசாரணை ஆணையர் களஆய்வு!! வேகமெடுக்குகிறதா விசாரணை?

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 6, 2023
  • 1 min read
ree
ree


புதுக்கோட்டை அருகே

முத்துக்காடு, வேங்கைவயலில்

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன்

மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, முன்னிலையில் களஆய்வு!

மாவட்ட ஆட்சியரகத்திலும் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்......


புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சி, வேங்கைவயல் நிகழ்வு குறித்து, ஓய்வுபெற்ற மாண்பமை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் , மாவட்ட ஆட்சித்தலைவர் .கவிதா ராமு, முன்னிலையில் இன்று களஆய்வு மேற்கொண்டு, மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

வேங்கைவயல் நிகழ்வு குறித்து உயர்நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன்

தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றையதினம் வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியை பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டியின் கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

ree

பின்னர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, முன்னிலையில் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொதுசுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் வேங்கைவயலில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வுபெற்ற மாண்பமை நீதியரசர் எம்.சத்தியநாராயணன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொ) பழனிச்சாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், துணை காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page