ராஜபாளையம், முடியும் தருவாயில்வளர்ச்சி - திட்டப் பணிகள்! அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.தகவல்!!
- உறியடி செய்திகள்

- Mar 17, 2023
- 1 min read

ராஜபாளையம் சுற்றுப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி - திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. புதிய வளர்ச்சித்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கவும் துரித நடவடிக்கை அமைச்சர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தகவல்!
இராஜபாளையம் தொகுதியில் (16.03.2023) நேற்று,
இராஜபாளையம் அடுத்த சத்திரப்பட்டி வெம்பக்கோட்டை சாலையில் (கடவு எண் - 449) இரயில்வே மேம்பாலத் திட்டப்பணியையும்
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் (SH-41) முதல் தென்காசி ரோட்டிற்கு (NH-747) இணைப்புச் சாலைத் திட்டப்பணியையும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ......,
தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், தி.மு.கழகத் தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின் உத்தி வுப்படி வளர்ச்சிப் பணிகள் குறித்து நேரடிகள ஆய்வு செய்யப்பட்டது. இங்குமேம்பாலப்பணி கள்
கொரோனாவின் தாக்கம் மற்றும் நில எடுப்பு பணி காரணமாக கால தாமதம் ஏற்பட்டாலும் தற்போது
85% பணி முடிவடைந்துள்ளது வரும் ஏப்ரல் மாதத்தில் சோதனை ஓட்டம்
நடத்தி பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு வரும் எனவும்
மேம்பால பணியை விரைந்து முடிக்க MLA விடம். தினந்தோறும் மேம்பாலப் பணியை பார்வையிட்டு துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக்கூறினார். அதனைத்தொடர்ந்து
தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் 95% முடிவடைந்துள்ளது
தற்போது 31.03.2023 அன்று பணி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயார் செய்யப்பட்டு வருகிறது அதுபோல்
பாதாள சாக்கடைத் திட்டப்பணியும்
90% பணி முடியப்பெற்றுள்ளது விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ளது எனக் கூறினார்.
அதனைத்தொடர்ந்து
இணைப்புச்சாலை குறித்து சக்தி கண் மருத்துவமனை அருகில் ஆய்வுமேற்கொண்ட அமைச்சர்

8.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து நில எடுப்பு பணிக்காக அரசு நிர்வாக ஒப்புதல்* பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்பணியில் 15(1) முடிவுற்று
19(2) ன் படி அரசு நிர்ணயம் செய்த தொகை சம்மதமா என நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் ஆலோசனைக்கூட்டம் இராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை 17.03.2023 நடைபெறவுள்ளது அக்கூட்டம் முடிந்தவுடன் நிலம் கையெகப்படுத்தும் பணியும் விரைவில் தொடங்கி சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு விரைவில் இணைப்புச்சாலை பணியும் தொடங்கும் எனக் கூறினார் .
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்.தங்கப்பாண்டியன்., நகர சேர்மன் பவித்ராஷியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மற்றும் கழக நிர்வாகிகள் நகராட்சி ஆணையர் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




Comments