ராஜபாளையம் வளர்ச்சி திட்டப்பணிகள்! 5.மாதங்களில்நிறைடையும் அமைச்சர்.கே.கே.எஸ். எஸ்.ஆர்.தகவல்!!
- உறியடி செய்திகள்

- Nov 1, 2022
- 1 min read

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் என மூன்று பணிகள் நடைபெற்று வருவதால் இராஜபாளையம் சாலைகள் சேதம் அடைந்து வாகன ஓட்டிகள் கடும்அவதிக்குள்ளாகி வருகின்றனர் .மேலும் தெருக்களிலும் சாலைகள் சரியில்லாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயம் அடைந்து பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர் மழை நேரங்களில் சாலைகளில் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் தேங்வுவதால் வாகன ஓட்டிகளும் அவதியுற்று வந்த நிலையில் இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்துக்கும் தொடர் கோரிக்கைகள் வந்தனர்.இந் நிலையில் தி.மு.கழக தலைவர்|தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு, வழிகாட்டுதன் படி,இராஜபாளையத்தில்...........

மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழ்நாடுவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தலைமை யில்,இராஜபாளையம் நகர்மன்ற அலுவலகத்தில் தாமிரபரணி கூட்டுக் குடித்திட்டம், பாதாள சாக்கடை திட்டம்,ரயில்வே மேம்பால பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மக்கள் பணிகளில், கூடுதல் கவனமுடன், விரைந்து பணிகளை முடக்க தமிழ்நாடுமுதல்வர் தளபதி.மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மே லும் பருவமழை தொடங்கியுள்ளதால் வளர்ச்சி, திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இதில் எந்த உதவி தேவைப்படுகிறது . அரசுதரப்பில் வேலைகள் முடிய எந்த மாதிரியான உதவியும்
உடனே செய்ய தயாராக இருக்கிறோம் நீங்களும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஐந்து மாத காலத்தில் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளையும் .வழங்கினார்.
அதன்பின் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
இந்த பகுதியில் திட்ட பணியில் அனைத்தும் விரைவாக முடிப்பதற்கு அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது விரைவாக பணிகள். முடிக்கப்படும் பொதுமக்கள் சிரமம் இன்றி செல்வதற்காக தெருக்களில் உள்ள சாலைகளையும் விரைவாக செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை மூலம் நிதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இராஜபாளையம் நகரில் வரி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்கள் தாமிரபரணி கூட்டுக் குடித்திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்த பின்பு வரிகள் சம்பந்தமாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும்.இவ்வாறாக அவர்கூறினார்....

முன்னதாக இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்கு,அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .இதில்
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் 341.50 லட்சம் மதிப்பீட்டில் ஆன புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி .தென்காசி பாராளுமன்ற, சட்டமன்ற, அனைத்து துறை அதிகாரிகள் - உள்ளீட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மணவை. எம்.எஸ்.ராஜா.....




Comments