சிறந்த ஆளுமைக்கான அங்கீகாரம்!க்ரே-டிக் வழங்கிய ட்விட்டர் நிறுவனம்! கனிமொழி கருணாநிதிக்கு பாராட்டு!!
- உறியடி செய்திகள்

- Apr 25, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை எம்.எஸ்.ராஜா...
ட்விட்டரில் க்ரே டிக்(Grey Tick) பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவரானார் திமுக கனிமொழி கருணாநிதி!
ட்விட்டர் நிறுவனம் உலகதலைவர்கள், வீரர்கள், நிறுவனங்கள் மற்றும் பிரபல முக்கியநடிகர்கள் உள்ளிட்டோர் சொந்த ட்விட்டர் கணக்கிற்கு நீல நிற அடையாள குறியை கொடுத்திருக்கும். சமீபத்தில் ட்விட்டர் இந்த முறையை மாற்றி நீலம் நிறம் நிறுபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.


திமுக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழகக்குழுத்துணைத்தலைவர்
துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, கழகப் பணிகள் மட்டுமின்றி, கவிஞராகவும், பழங்கால கலைகளை வெளி உலகிற்க்கு எடுத்துவரும் பணியிலும், தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய ஒன்றிய அளவிலான அரசியல் பார்வை கொண்டவராகவும், சிறந்த அரசியல்பெண் ஆளுமையாகவும்,மிகச்சிறந்த மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துவரும் மக்கள் பிரதிநிதியாகவும், எழுத்தாளர் என பன்முக
தன்மை கொண்டவராகவும் தனது பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.
இந்நிலையில் கனிமொழி கருணாநிதியின் ட்விட்டர் கணக்கிற்கு, அந்நிறுவனம் இவரின் பணிகளை ஊக்கிவிக்கும் வகையில்
கிரே - டிக் நிற குறியீட்டை வழங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவர் என்கிற பெருமையை
கனிமொழி கருணாநிதி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர். தமிழ்நாடு சமூகநலன்-மகளீர் உரிமைத்துறை கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.




Comments