தி.மு.கபுதியஉறுப்பினர்கள்சேர்ப்பு!விதிகளைபின்பற்றி பணியாற்றுங்கள் அமைச்சர்,முத்துச்சாமி பேச்சு !!
- உறியடி செய்திகள்

- Apr 15, 2023
- 1 min read

ஆசிரியர். மணவை.எம்.எஸ்.ராஜா...
ஈரோடு மாவட்ட (தெற்கு) தி.மு.கழக ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் சு.முத்துச்சாமி கழக விதிகளை பின்பற்றி பணியாற்றுங்கள் என்று கூறினார்....
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மணல்மேடு. மாவட்ட தி.மு.கழக அலுவலகத்தில். ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் முத்துச்சாமிபேசும்போது கூறியதாவது........
கழக நிர்வாகிகள் அனைவருக்கும் . கழகத்தலைவரின் அறிவுறுத்தலின்படி பூத் கமிட்டி அமைத்தல் பணியில் ப விதிமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும்,
பூத் முகவர்கள் 2 பொறுப்பில் கிளைக் கழக / வார்டு செயலாளர் இருக்கக் கூடாது.
. பூத் கமிட்டியில் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் இருக்க வேண்டும். உதாரணமாக
1000 வாக்காளர்கள் கொண்ட பூத்தில் 10 பூத் கமிட்டி உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இந்தப் பட்டியலில் பூத் முகவர்கள்2 சேர்க்க கூடாது.
பூத் முகவர்கள்2 பட்டியலை தனிப்பட்டியலாக வழங்க வேண்டும்.

பூத் கமிட்டியில் கழக செயலாளர்கள் தவிர்த்து அவர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால் பிற நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் செயல்படலாம்.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் அந்தந்த பூத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டியில் செயல்பட முடியும்.....

பூத் கமிட்டியில் தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்தவர் அல்லது தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர் இருக்க வேண்டும். வாட்ஸப் உள்ளிட்டவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட ஏதுவாக இருக்கும்.
பூத் கமிட்டியானது இளைஞர், மகளிர் என கலந்து இருப்பின் சிறப்பு.
பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் செயலாற்றுபவராக இருத்தல் வேண்டும். மேலும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நமது அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவராக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்.அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.

மாநில விவசாய அணி அமைப்பாளர் சச்சிதாநந்தம், கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரக்குமார், முன்னால் அமைச்சர், மாநிலங் கலவை உறுப்பினர் அந்த யூர் செல்வராஜ். மாநகர மேயர் நாகரெத்தினம் சுப்பிரமணியன். இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி கழக, வட்ட கழக , ஒன்றிய, பேருர் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.




Comments