top of page
Search

புனர்வாழ்வு சட்ட மசோதா! இலங்கை தமிழர்கள் மீது மற்றுமொரு போர்!! மே.17 இயக்கம் ஐ.நா.வுக்கு கோரிக்கை!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Nov 6, 2022
  • 1 min read
ree


புதிய புனர்வாழ்வு சட்ட மசோதா – இலங்கையில் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் மற்றுமொரு போர்!


- மே 17 இயக்கக் குரல் இணையதள கட்டுரை : நவ.5. இன்று வெளியிட்டுள்ள கட்டுரையின் சுறுக்கம்......


கடந்த செப்டம்பர் 23 அன்று இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் இரணில் விக்கிரமசிங்கேவின் அரசு புனர்வாழ்வு சட்ட மசோதாவை முன்மொழிந்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் சித்திரவதைகளை அதிகரிக்கும் வகையில் அதில் பல சட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டிருந்தன. குறிப்பாக, இந்த சட்டத்தில் உள்ள 17ஆம் பிரிவு, இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஆயுதப்படையின் எந்தவொரு உறுப்பினரையும் நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழு அதிகாரத்தை அளிக்கிறது.

ree

இதன் மூலம் அரசை எதிர்ப்பவர்களை குறிவைக்கவும், போராளிகளை ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தவும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த புதிய சட்டத்தின்படி ஈழத்தமிழர் மீது ஒடுக்குமுறையை ஏவும் எந்த அதிகாரியையும் கைது செய்ய இயலாது.


இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், நீதித்துறை நடைமுறைகள் எதுவும் இல்லாமல் காவல்துறை யாரையும் கைது செய்து நேரடியாக புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப முடியும்.

மேலும், “முகாம்களில் இருக்கும் நபர்களை பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உற்பத்தி ரீதியாக பயன்படுத்தப்படலாம்” எனும் சரத்து இனி இந்த சித்திரவதை முகாம்களை கொத்தடிமை மையங்களாகவும் சிங்கள அரசு நடத்தலாம் என்பதற்கு சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.......

பொருளாதார நெருக்கடி, ஐநாவில் இலங்கை குறித்தான தீர்மானங்கள் என கடுமையான சூழலில் இருக்கும்போதே இலங்கை அரசு இப்படி தமிழனத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறதென்றால் இலங்கை அரசின் தமிழினவிரோதத்தை இதன் பிறகாவது சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு தமிழனத்திற்கான நீதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும்.


இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page