மக்களால் நிராகரிக்கபட்டவர்கள்! புலம்பல்களை பற்றி கவலையில்லை!! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!!
- உறியடி செய்திகள்

- Dec 9, 2022
- 3 min read

மணவை.எம்.எஸ்.ராஜா.
மக்களால் நிராகரிக்கபட்டவர்களின் வயிற்றெரிச்சல் புலம்பள்கள் பற்றி கவலையில்லை! இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டில், மக்கள்நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களின் இலட்சியம் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.....
தென்காசி மாவட்டம், கணக்கப்பிள்ளைவலசைப் பகுதியில் நடைபெற்ற, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, ஏராளமான,முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் பேசியதாவது....
தென்காசி வந்தவுடன் இந்த மண்ணை போல என் மனம் குளிர்ச்சடைந்துள்ளது.
எப்போதும் சாரல் வீசும் இந்த மண், சென்னை மாநகரத்திலிருந்து வந்த எனக்கு மிகவும் இதமாக உள்ளது. அனைத்து வளங்களையும், பெற்றுள்ள ஒரு மாவட்டம் தென்காசி.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்! மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்! கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்! கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்! தேன் அருவித் திரை எழும்பி வான்வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்! கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்! குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே! என்று போற்றிப் பாடப்பட்ட திருக்குற்றால வனப்பரப்புக்கு நான் வந்திருக்கிறேன்!

தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. எப்போதும் லேசான தூறல் சாரலாகப் பெய்து வருவதைப் பார்க்கும்போது சென்னை போன்ற வெப்பமான நகரத்தில் இருந்து வரும் எனக்கு இது மிகவும் இதமாக இருக்கிறது ஆண்டுதோறும் சாரல் விழாவை அரசு கொண்டாடி வருகிறது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் மாவட்டம்!
குறிஞ்சி, மருதம், முல்லை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய குற்றாலம் இருக்கக்கூடிய மாவட்டம்! • அதிகமான அருவிகள் உள்ள மாவட்டம் • அணைகள் அதிகம் உள்ள மாவட்டம்! 2 மொத்தத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் இந்த தென்காசி மாவட்டம் அது மட்டுமல்ல வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்து 1755 ஆம் ஆண்டே ஆங்கிலேயர்க்கு வரி கட்ட மறுத்த பூலித்தேவன் மண் இந்த மண்
இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன்........

1998-ஆம் ஆண்டு நெற்கட்டான்செவலில் மாவீரன் பூலித்தேவனுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்துக் கொடுத்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர்தான்...... மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக இருந்த மாவீரன் ஒண்டி வீரனின் மண் இந்த மண் அந்த ஒண்டி வீரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தான்!
அவர் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது வடக்கே காசி இருப்பதைப் போல தெற்கேயும் ஒரு காசியை உருவாக்க வேண்டும் என்று மன்னன் பராக்கிரம பாண்டியன் நினைத்து உருவாக்கியதுதான் தென்காசி கோபுரம்! அரிகேசரி பராக்கிரம பாண்டியன். இங்கிருந்துதான் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்றான்...... 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தென்காசி கோயில் ராஜகோபுரத்தை மீண்டும் புதுப்பிக்க 1960-ஆம் ஆண்டு முயற்சிகள். மேற்கொள்ளப்பட்டது..
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவர் பிறந்த மண் இது......

புலித்தேவருக்கு நெற்கட்டும் செவலில் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்தது கலைஞர் ஆட்சியில்.
பராக்கிரபாண்டியரால் கட்டப்பட்டுள்ள பழமையான கோவிலுக்கு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது கழக தலைவர் கலைஞர் ஆட்சியில் தான்.
இது அரசு விழாவா, இல்லை எங்கள் கட்சியின் மாநில மாநாடா என்று கேள்வி எழுப்பும் வகையில் இந்த விழாவினை தென்காசி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.
கழக ஆட்சி தொடங்கி 19 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தமிழக மக்களுக்கு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து நெஞ்சை நிமிர்த்து பதில் அளிப்பேன். ஏனென்றால் அவ்வளவு சிறப்பான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, தென்காசி மாவட்டத்தில் மட்டும் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.
11490 மக்கள் குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
27 கோடியே 77 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், 49,900 மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். 2990 திருநங்கைகள் பலன் அடைந்துள்ளனர். இப்படி பல்வேறு சாதனைகளை தென்காசி மாவட்டத்தில் மட்டுமே சொல்லிக் கொண்டே போகலாம்.......

இயற்கைக்கும், வீரத்துக்கும், ஆன்மிகத்துக்கும், வேளாண்மைக்கும் புகழ்பெற்ற தென்காசிக்கு வந்ததில் பெருமை கொள்கிறேன். சங்கரன்கோயில் – புளியங்குடி தேசிய நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புளியங்குடியில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஆலங்குளத்தில் வேளாண் ஒழுங்குமுறை மையம் அமைக்கப்படும்.
தென்காசி மக்களின் பிரதான கோரிக்கையான ஜம்பு நதி திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படாததால் திட்டம் தாமதமானது. தற்போது வனத்துறையிடமிருந்து அனுமதி பெறப்பட்டு விட்டது. முறையாக பணிகள் விரைவில் வழங்கும். ஜம்புநதி திட்டம் பணிகள் தொடங்கப்படும்.
ஆட்சிக்கு வந்து 19 மாதங்களில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் 50,390 மாணவர்கள் பலன் பெற்றுள்ளனர். உங்கள் முதல்வர் திட்டத்தின் கீழ் 11,490 மனுக்கள் பெறப்பட்டு 11,400 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.........

தென்காசி மாவட்டம் வினைதீர்த்த நாடார் பட்டியை சேர்ந்த 3-வகுப்பு படிக்கக்கூடிய மாணவி ஆரதனா, ஒரு கடிதம் எனக்கு எழுதினார். அதில் தான் படித்து வரும் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கேட்டிருந்தார்.
அவரது கோரிக்கை இந்த மேடையிலே.சிறுமி. ஆராதனா வைத்த கோரிக்கை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படும். குழந்தைகளும் என் மீதும், கழக அரசின் நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதங்களை அனுப்புகின்றார்கள். நிறைவேற்றபட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல், சிறிது காலதாமதாக செய்ய வேண்டிய திட்டங்களை, குறைகூறிவந்தார்.
பின்னர், இப்போது எந்த நலத்திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என தமிழக எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிச்சாமி புலம்பிக் கொண்டிருக்கிறார்.
எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம், உணர்வுபூர்வமாக, ஆக்கப்பூர்வமானப் பணிகளை மக்களின் தேவைகளையறிந்து, இயன்றவரை விரைந்து செயல்படுத்தி, நிறைவேற்றி வருகிறோம். எனவே
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் எரிச்சலால் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை........

தமிழகத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதை எங்களது குறிக்கோள்
ஒன்றிய அரசு சார்பில் வெளியிடப்படும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தாலே தமிழகத்தின் வளர்ச்சி தெரியும்.
குற்றாலத்தில் இருந்து விழா நடைபெறும் மேடைக்கு சுமார் 10 நிமிடங்களில் வந்து விடலாம். ஆனால் நான் வருவதற்கு ஒரு மணி நேரங்களுக்கு மேலாக ஆனது. அதற்கு காரணம் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வழிநெடுகிலும் மக்கள் அளித்த வரவேற்பு தான் காரணம்....

இவ்வாறாக விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.....
விழாவில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர் சேலம் மண்டல பொருப்பாளர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு, தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்,ஐ.பெரியசாமி, விருதுநகர் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர். தமிழக வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற, உறுப்பினர்கள்.அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.....
தொடர்ந்து, விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வழியாக கணக்கப்பிள்ளை வலசை பகுதியில் விழா நடைபெறும் அரங்கிற்கு வருகை தந்தார்......

அப்போது, வரும் வழியில் வாழை தோரணங்கள் கட்டி சாலையின் இருபுறங்களும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.....




Comments