top of page
Search

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி கடல்கரையில் ஆய்வு! துரித நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 20, 2023
  • 2 min read
ree


தூத்துக்குடியில் கலை திருவிழா - புத்தகக் காட்சி பலூனை முன்னோட்டமாக

பறக்க விட்டு தொடங்கி வைத்தார் எம்.பி.கனிமொழி கருணாநிதி .....

தூத்துக்குடியில்நெய்தல் கலை திருவிழா

புத்தகக் காட்சி நாளை ஏப்.21. வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. தொடர்ந்து வரும் ஏப்.28ஆம் தேதி முதல் புத்தகக் காட்சியுடன் தூத்துக்குடி மண்ணின் நெய்தல் கலைத்திருவிழாவும் கோலாகலமாக துவங்குகிறது.....

ree

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலை, சங்கரப்பேரி விலக்கு பகுதியிலுள்ள திடலில் புத்தகக் காட்சி, நாளை தொடங்கி (ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை) 11 நாட்கள் நடைபெறுகிறது, இதில் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை, நெய்தல் கலைத் திருவிழாவும் இந்தியா புத்தகக் கண்காட்சியுடன் இணைந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. இன்று ஏப்.21. வியாழக்கிழமை புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தை

தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர். நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்களின் க்குழுத்துணைத் தலைவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்

கனிமொழி கருணாநிதி நேரில் கலந்துகொண்டு

பிரம்மாண்ட பலுானை பறக்க விட்டு, விழாவை தொடங்கி வைத்தார்.

ree
ree

தொடர்ந்து விழா குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்....

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் வழியில், திராவிட மாடல் ஆட்சி மூலம் எல்லோருக்கும் எல்லாம் என்கிற இலக்கை

நோக்கியும் தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் நாட்டுமக்களுக்கான அரசாக, தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின், பழங்காலத்து பண்பாடுகளையும், பாரம்பரிய கலைகளையும் பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் தாயுள்ளத்துடன் ஓய்வின்றி மக்களுக்கான பணிகளை செய்து வருகிறார். இதற்கு கீழடி உள்ளிட்ட இடங்களில் பழம் கால சரித்தை வெளிகொண்டுவர, அவர் எடுத்துவரும் முயற்சிகளும் ஒரு உதாரம் என்றே கூறலாம்.....


ree

அந்தவகையில் தூத்துக்குடியில்

நடைபெறும்நெய்தல் கலைத்திருவிழாவில் தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் முழுவதிலிருந்தும் 300க்கும்- மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். இதில்

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை, கிராமிய நிகழ்ச்சி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாக தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்படவும் உள்ளது.


புத்தகக் காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சிக்கு 18 வயதிற்குட்பட்ட கலைஞர்களின் படைப்புகள் ஒரு பிரிவாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்களின் படைப்புகளும் இடம்பெற தங்களின் சிறந்த புகைப்படங்களை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த புகைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசு ரூ.50,000 ஆயிரமும் ஆறுதல் பரிசாக 10 புகைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு கனிமொழி கருணாநிதி கூறினார்.

ree
ree

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதி, ராஜபாளையம் பகுதி ஆகிய இடங்களில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கடல் நீரானது கரையை கடந்து சுமார் 60 அடி தூரம் வெளியில் வந்ததை தொடர்ந்து,

ree
ree

நேற்று ஏப்20, வியாழக்கிழமை, கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தகவலறிந்த தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கோரிக்கைகளை கேட்டறிந்தவர்.விரைந்து உரிய நடவடிக்கைஎடுக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ஆலோசனைகளையும் வழங்கினார்....

தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் .தினேஷ்குமார் உட்பட பலர் உடன் சென்றனர்.

இதனை தொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்சிகளிலும் கலந்து கொண்டார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page