ஆர்.என். ரவி கவர்னரா! எதிர்கட்சி தலைவரா !! தி.மு.கழக முதன்மைச் செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
- உறியடி செய்திகள்

- Oct 31, 2022
- 1 min read

ஆர்.என்.ரவி.கவர்னரா, சனாதானத்தை முன்வைத்து செயல்படும் எதிர்கட்சி தலைவரா? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி?
திருச்சி கலைஞர் அறிவாலையத்தில் மத்திய மாவட்ட தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் இன்றுநடைபெற்றது.
இதில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது.....

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனைகளால் இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், அந்த இடத்தை பிடிக்க பா.ஜ.க பல்வேறு குறுக்குவழிகளையும், புறவழி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதனை முன்னெடுத்தே தமிழ்நாட்டில், அனைத்து மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகின்ற நமது தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கவேண்டுமென்கிற திட்டமிட்ட உள்நோக்கத்தோடும், தங்களின் அரசியல் சுயநலனுக்காகவும் பா.ஜ.க. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான பிரித்தாளும் சூழ்ச்சி அரசியலை தொடர்ந்து செய்து வருகின்றது..............

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பதவியின் பொறுப்புக்களை மறந்து சனாதான கருத்துக்களை முன்வைத்து, எதிர்கட்சித் தலைவரைப் போல தமிழ்நாட்டு மக்களுக்கெதிராகசெயப்படுவதாக தனது நடவடிக்கைகளை வெளிகாட்டிகொண்டு வருகிறார்.
அதேபோல் அதிமுக, வை ஒன்றுசேரவிடாமல், மேலும், மேலும் பல்வேறு குழப்பங்களையும், சூழ்ச்சிகளையும் பா.ஜ.க.மேற்கொண்டு
வருகின்றது.........

இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக நிறைவேற்றிட, முடிவெடுத்து திட்டங்களை வகுத்து செயல்படுத்த முயலுகின்றது. ஆனால் பா.ஜ.க. சங்பரிவார சக்திகள், மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முயலும் அதிகாரிகளையும் மிரட்டி வருகிறது. இதனால் அரசு அதிகாரிகள் மட்டத்தில் மிகுந்த அச்சத்திலும், மன உலைச்சலிலும் உள்ளார்கள்.
எனவே பா.ஜ.க.வின் இந்த வஞ்சக சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில், தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் ஒற்றுமையாக செயல்பட்டு, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுகளிலும் வெற்றிவாகை சூட வேண்டும்

திருச்சியில் நாம் பெறும் வெற்றி, தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் எதிரெலிக்கும். இவ்வாறா அவர் பேசினார்.
முன்னதாக, இரண்டாவது முறையாக தி.மு.கழகத்தின் முதன்மைச் செயலாளராக, அமைச்சர் கே.என்.நேரு வை நியமித்தமைக்கு நன்றி தெரிவித்தும்.
வருகிற நவ.2. ம் தேதி திருச்சியையடுத்தமொன்டிப்பட்டி காகித ஆலை அளகு 2ல், புதிய காகித 2வது யூனிட் தொடங்கிவைக்க வருகைதரும், தி.மு.கழக தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் பல்லாயிரககணக்கான கழக தொண்டர்கள்
புடை கழஉற்சாகமாக வரவேற்பது. வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து வாக்குசாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ.வழக்கறிஞர் வைரமணி, மாநகர செயலாளர், மேயர் அன்பழகன்.எம்.எல்.ஏ.க்கள், பழனியாண்டி, கதிரவன்,செளந்திரராஜன், முன்னால் எம்.எல்.ஏ.க்கள், அன்பில் பெரியசாமி, பரணிக்குமார். மாவட்ட துணைச்செயலாளர், எடமலைபட்டிபுதூர் முத்துச் செல்வம், டோல்கேட் சுப்பிரமணியன். தில்லைநகர் கண்ணன்.உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.




Comments