ஆர்.என்.ரவியின் சனாதான போக்கு! கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்!!
- உறியடி செய்திகள்

- Nov 18, 2022
- 1 min read

தமிழக ஆளுநர், ஆர்.என்.ரவியின் போக்கை கண்டித்து, ஆளுநர் மாளிகை முற்றுகை-போராட்டம்!
தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கெதிராக, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சை போக்கை கடைபிடித்து வருவதாக பல்வேறு தரப்பினரால், கடும் குற்றச்சாட்டுகளை கூறப்பட்டுவருகின்றன இதனை தொடர்ந்து மோதல் போக்கும் ஏற்பட்டு வருகிறது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்டமசோதாக்களை கிடப்பில் போட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டப்பட்டும் வருகின்றது.
மேலும் அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் வகித்து வரும் பதவியின் மாண்பை மறந்து, தொடர்ந்து வெளிப்படுத்துவதாக அமைச்சர்களே புகார் தெரிவித்திருந்தனர். இதே போல திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நாடுகளும் ஏதோ ஒரு மதத்தை பின்பற்றுவதாவும் தெரிவித்திருந்தார். இது போன்ற கருத்துகள் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையவைத்து. மேலும் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தி என்ஐஏக்கு வழக்கை மாற்றியதாகவும் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தநிலையில் திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பாக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.....

இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
. அப்போது. தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் ஆர்.என் ரவி, தனதுபொறுப்பை உணர்ந்து மக்களுக்கு, செயல்படாமல், தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக அரசியல் கட்சி தலைவரைப் போல பகிரங்கமாக போட்டி அரசாங்கத்தை போல நடத்தி வருவதுபோல் செயல்பட்டு வருகின்றார். தமிழ்நாட்டு மக்களின்,மதச் சார்பின்மைக்கு நேர்மாறாகவும் செயல்பட்டும் வருகின்றார்....
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மக்கள் நலனுக்காக தான் நிறைவேற்றப்படுகிறது. அவ்வாறு நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் உள்ளார். அந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியும் வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். எனவே ஆளுநரின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதி சென்னையில் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும் . போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்வாறாக அவர் கூறினார் .




Comments