தூத்துக்குடி அருகே சாலை விபத்து! உரிய நேரத்தில் உதவி!! அமைச்சர் கீதாஜீவனுக்கு பாராட்டு!!!
- உறியடி செய்திகள்

- Apr 23, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா
அரசியலிலும், ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும்,மனிதநேயம், மனிதாபிமானம், எங்கே என
தேடும் இக்காலத்தில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிலான, தூத்துக்குடிமாவட்டத்தின் தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை அமைச்சரான கீதாஜீதா ஜீவன் காலத்தே செய்துவரும், இது
போன்று தனது கவனத்திற்கு வரும் நிலையில் குப்பனாலும் - சுப்பனாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவும் செயல்களையும் அக்காலகட்டங்களில் துரித
நடவடிக்கைகளையும் பொதுமக்கள், மனிதநே யஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும்,நெகிழ்ச்சியோடு பாராட்டுகின்றனர்.!
விபத்தில் சிக்கிய பெண்! மீட்டு பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கீதாஜீவன்.!!

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த காவல்துறை பணியாளர் முத்துக்குமார். தனது தாயார் செல்வபாரதியுடன் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் இருச்சக்கர வாகனத்தில் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வேகத்தடையை தாண்டிய போது, செல்வபாரதி நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். விழுந்ததில் தலையில் அடிபட்டு காயத்திலிருந்தும்இரத்தம் அதிகமாக வெளியேறி சுயநினைவை இழக்கும் நிலையில் இரவு நேரமானதால் உதவிக்கு யாருமின்றி தவித்திருக்கின்றனர்.....

அப்போது சென்னையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை முடித்துவிட்டு தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்த, தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் விபத்தில் சிக்கிய பெண்ணைக் கண்டவுடன் தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி, அப்பெண்ணை மீட்டதுடன், உடனடியாக தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்,

சிகிச்சையளிக்க உள்ள மருத்துவமனையைமையும் உடனடியாக தொடர்புகொண்டு, மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்குதுரிதமாக சிகிச்சையளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.




Comments