குளித்தலைஅய்யர்மலைக்கோவில் ரோப்கார் சேவை! விரைவில் தொடங்க நடவடிக்கை! இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ.தகவல்!!
- உறியடி செய்திகள்

- May 18, 2023
- 1 min read
Updated: May 19, 2023

மணவை எம்.எஸ்.ராஜா
குளித்தலை, அய்யர்மலை ரோப்கார் சேவை விரைவாக தொடங்க நடவடிக்கை தீவிரம் எம்.எல்.ஏ.மாணிக்கம் தகவல்!
குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மிக முக்கிய கோவில் ஸ்தலங்களில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வர்மலைக்கோவில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் இடமாகும்.
குளித்தலைநகர தி.மு.கழகச் செயலாளர் இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ.தி.மு.கழக ஆட்சி அமையும்போதோதெல்லாாம் அரசைவலியுறுத்தி வரும் முக்கிய கோரிக்கைகளில் அய்யர்மலைரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்குரோப்கார் அமைக்கும் திட்டமும் ஒன்றாகவேயிருந்து வந்தது.
நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில், குளித்தலை தொகுதி எம் எல் ஏ.வாக மீண்டும் வெற்றிப்பெற்ற இரா.மாணிக்கம் தொடர் வலியுறுத்தல்களை ஏற்று, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அய்யர்மலைமலைக்கோவிலுக்கு ரோப்கார் சேவையை தொடங்கி பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்துரோப்கார் அமைக்கும் பணிகளுக்கான ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் வழங்கியதையடுத்து பணிகளும் முறையாகவும், விரைவாகவும் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குளித்தலைநகர தி.மு.கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் அய்யர்மலை ரோப் கார் அமைக்கும்பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டு, ரோப்கார் பணிகளை விரைவாக முடித்திட முடுக்கிவிட்டு, ஆலோசனைகளும் வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும் போது, பல்லாயிரக்கணக்காண மக்களும், பக்தர்களும் பயன்பெறும் வகையில், ரோப்கார் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,ரோப்கார் அமைக்கும் பணிகளை, அமைச்சர்கள். பி.கே.சேகர்பாபு, செந்தில் பாலாஜியும் தொடர்ந்து பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றனர்!
எதிர்பார்த்த கால அவகாசத்திற்குள் அய்யர்மலைரத்தினகிரீஸ்வரர், மலைகோவில் ரோப்கார்கள் சேவைகளை இயக்கவும் பணிகளை தீவிரபடுத்தி, பணிகளையும் முடுக்கிவிடப்பட்டு வருகின்றது.
மேலும் குளித்தலை தொகுதிக்குட்பட்ட நங்கவரத்தில் தொகுதி மக்களின் சார்பில் நீண்டநாள் கோரிக்கையினை முதல்வர் தளபதியாரின் மேலான பார்வைக்கு கொண்டு சென்றதையடுத்து, அங்கு புதிய காவல்நிலையம் அமைக்கவும், பழதடைந்த, வாடகை கட்டிடங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு படிப்படியாக புதிய கட்டிடங்கள் ஏற்படுத்தவும் சுகாதாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இதேபோல் தொகுதி முழுவதும் உள்ள சமத்துவபுரங்கள் புனரமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும் உள்ளது.
மேலும்நமது தொகுதியின் வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளும், வளர்ச்சி செயல் படுத்தப்பட்டு வருகின்றது.
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் தொகுதியான குளித்தலை பகுதி மக்களின் அடிப்படை, அத்தியாவச தேவைகள் குறித்து தொடர்ந்து தாயுள்ளம் படைத்த, ஒரு தந்தைப் போல மக்கள் பணிகளை முன்னெடுத்துவரும் கழகத் தலைவர் தளபதியார் ஆட்சியில் குளித்தலை தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி-திட்டங்களை தொடர்ந்து வழங்குவாார்....

இப்படி மக்களுக்கான திட்டப்பணிகளை தொடர்ந்து வழங்கிவரும் முதல்வர் தளபதியார் கரத்தை அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறாக எம்.எல்.ஏ.மாணிக்கம் கூறினாார்.
நகர தி.மு.கழக பொருளாளர் தமிழரசன், துணைச்செயலளார்.செந்தில்குமார்,நங்கவரம் பேரூராட்சித்துணைத்தலைவர் முத்து அன்புச் செல்வன், உடனிருந்தார்கள்...
தோகமலை ராஜா...




Comments