சேலம்,டிச.17.தி.மு.க. இளைஞரணி மாநாடு! கே .என்.நேரு ஆய்வு! மகளீர் உரிமை தொகை விழாவிலும் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Sep 16, 2023
- 1 min read
Updated: Sep 16, 2023

மூத்தப்பத்திரிக்தையாளர் ராஜா...
சேலம்,டிச.17.தி.மு.க. இளைஞரணி மாநாடு! அமைச்சர் கே .என்.நேரு ஆய்வு! மகளீர் உரிமை தொகை விழாவிலும் பங்கேற்பு! உற்சாகத்தில் கட்சியினர், அமைச்சருக்கும் பாராட்டு!
பொதுவாக முத்தமிழறிஞர் கலைஞரும், இப்போதைய தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அரசு - கட்சி,நிகழ்ச்சிகளில் பேசும் போது மாநாடு என்றாலே, கே.என்.நேரு! கே.என்.நேரு என்றாலே மாநாடுதான், என்று சும்மாவா சொன்னார்கள்.!
என்கிற தொண்டர்களின் உற்சாக குரலும் ஒலிக்காமலுமில்லை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று செப்.15. வெள்ளிக்கிழமை
காஞ்சிபுரத்தில் பெ ற்ற விழாவில், கலைஞர் மகளீர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.....

இதனை தொடர்ந்து, சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், குரும்பப்பட்டி ஊராட்சி, அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் தொடக்கவிழா நடைபெற்றது.!
தி.மு.கழக முதன்மைச்செயலாளர். சேலம் மாவட்ட பொறுப்பாளர்,
நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிழாவில் கலந்துகொண்டு
பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.!
பின்னர் விழாவில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் நிறைவேற்றப்பட்ட ஆக்கப்பூர்வான திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.!



மேயர் ராமச்சந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்,
சட்டமன்ற உறுப்பினர்கள்.ராஜேந்திரன், அருள், சதாசிவம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், தி.மு.கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.!


தொடர்ந்து, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர்.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி வாழப்பாடி அருகேயுள்ள பெத்தா நாயக்கன்பாளையத்தில் டிச.17ந் தேதி நடைபெறவுள்ள, இரண்டாவது தி.மு.கழக இளைஞரணி மாநாடு நடைபெற தேர்வு செய்யப்பட்ட மைதானத்தில் நேரில் பார்வையிட்டு, முதல்கட்ட ஆரம்பப் பணிகள் குறித்தும் பார்வையிட்டு, கட்சியின் நிர்வாகிகளுடன் கொட்டும் மழையில் ஆலோசனையும் மேற்கொண்டார் அமைச்சர் கே.என்.நேரு.!
இந்நிகழ்வு குறித்து நிகழ்விடத்தில்,தி.மு.கழக நிர்வாகிகள் கூறும் போது!

எங்கள் அமைச்சர் கடந்தகால கட்சி பணிகளையும், அவர் முன்னெடுத்த நிகழ்ச்சிகள், மாநாட்டுப் பணிகள் போன்றவற்றை, தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல! பிற மாநில கட்சிகளின் தலைவர்களும் வியந்து பாராட்டும் வகையில் இரவு பகல் பாராது, பணிகளை அயராது, கழகத்தினரையும் அரவணைத்து உற்சாகமூட்டி வழிநடத்தும் பண்பும் அவரது இணையில்லா அன்பும், கட்சியினர் - பொதுமக்கள் என அனைவரையும் வெகுவாகா ஈர்த்து, ஆர்வமுடன் பணிகளை செய்திட தூண்டியுள்ளது.!
இவ்வாறாக அவர்கள் கூறினார்கள்.!
பொதுவாக முத்தமிழறிஞர் கலைஞரும், இப்போதைய தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின், அரசு - கட்சி,நிகழ்ச்சிகளில் பேசும் போது மாநாடு என்றாலே, கே.என்.நேரு! கே.என்.நேரு என்றாலே மாநாடுதான், என்று சும்மாவா சொன்னார்கள்.!
என்கிற தொண்டர்களின் உற்சாக குரலும் ஒலிக்காமலுமில்லை!
ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.!




Comments