சேலம்- திருச்சியில் தி.மு.கழக தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி! அமைச்சர் கே.என்.நேரு முடுக்கிவிட்டார்!
- உறியடி செய்திகள்

- Apr 3, 2023
- 1 min read


சேலம்- திருச்சி மாவட்டங்களில், இன்று காலை- மாலை. என சுற்றுப் பயணம் மேற்கொண்டு தி.மு.கழக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை. முதன்மைச் செயலாளர், அமைச்சர்,
கே என்.நேரு தொடங்கிவைத்து, கள ஆய்வு மேற்கொண்டு உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முடுக்கிவிட்டார்

இன்று பிற்பகலில், சேலம் வடக்கு மாவட்டத்தில்.தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம். குடிநீர் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்...


தொடர்ந்து
சேலம் மாவட்ட செயலாளர். முன்னால் எம்.பி.டி.எம். செல்வகணபதி
சங்ககிரி சட்டமன்ற தொகுதி,மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் ஆர்.கே திருமண மண்டபத்தில் துவங்கி வைத்தார்..
உடன் சங்ககிரி தொகுதி பார்வையாளர் முருகவேல்,மாநில கழக இணைச் செயலாளர், வர்த்தக அணி,மாவட்ட, நகர,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்று காலை திருச்சி மண்டலத்தில், முசிறி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள். திருச்சி மேற்கு சட்டமன்றதொகுதிக்குட்பட்ட உறையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கைகளை, தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறைஅமைச்சர், கே.என்.நேரு நேரடியாகச் சென்று புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை துவக்கிவைத்து பணிகளை முடுக்கிவிட்டு, கட்சி நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி பேசினார்.

திருச்சி மாநகர தி.மு.கழக செயலாளர்.மாநகர மேயர் மு.அன்பழகன், வடக்குமாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி. மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் வார்டு மண்டல பொருப்பாளர்களும் சார்பு அணியினரும் கலந்துகொண்டார்கள்..




Comments