தூத்துக்குடி.பா.ஜ.கூட்டத்தில் பதில்கூறுவேன் நாரயாணன் திருப்தி! நீங்காளாவது உண்மையை பேசுங்க சார்
- உறியடி செய்திகள்

- Dec 20, 2022
- 2 min read
Updated: Dec 21, 2022

மணவை.எம்.எஸ்.ராஜா...
தூத்துக்குடி பா.ஜ.க. கூட்டத்தில் தி.மு.க.வினருக்கு நான் பதிலளித்து பேசுவேன் என்று பா.ஜ. மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான நாராயணன் திருப்பதி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் வேலையை செய்ய முடியாமல் அரசியலுக்கு வந்தவர் எனவும் அவர் அரசியலுக்கு வந்து வருடம் தான் ஆகிறது. போலியான புகைப்படங்களை வைத்து அண்ணாமலை அரசியல் செய்கிறார். ஆதாரமற்ற வீண் அரசியல் லாபத்திற்காக தன் இருப்பை காட்டிகொள்ளவதற்காக இது போன்ற தவறான, உண்மைக்கு மாறான விமர்சனங்களை இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் அண்ணாமலையின், பேச்சுக்கு அதே இடத்தில் பதிலளித்து, பேச வேண்டி வரும் எனும் தொனியில் பேசியிருந்ததாக கூறப்படுகின்றது....
இது குறித்து சமூக வலைதளத்தில் பா.ஜ. மூத்த நிர்வாகிகளுள் ஒருவரான,நாராயணன் திருபதி. தி.மு.க. ஆள்வது தமிழகத்தை, நாங்கள் இந்தியாவை ஆள்கின்றோம் அண்ணாமலை ஒரு பொருப்புமிக்கத் தலைவர், அவரின் செயல்பாடுகளை அமைச்சர் விமர்சித்தது ஏற்க முடியாது. தூத்துக்குடியில் பா.ஜ.பொதுக்கூட்டத்தில் நானே நேரில் வந்து இதற்கெல்லாம் பதிலளித்து பேசுவேன் என்று கூறியிருந்தார்.
இது குறித்து தூத்துக்குடி, வாக்காளர்கள், அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரை தொடர்பு கொண்டபோது.
அண்ணாமலை தமிழக பா.ஜ. தலைவராக பொருப்பேற்றது பின்னர் தனக்கு வழங்கபட்ட பொருப்பின் மாண்பிற்கெதிராக, மைக்கேல் பட்டியில் தொடங்கி கோவை கேஸ் கார் வெடிப்பு சம்பவம், ரபேல் வாட்ச் கதை,வரை, முன்னுக்குப்பின் முரணாக, உண்மைக்கு முற்றிலும் புறம்பாக தகவல்களையும், பேசிதமிழ்நாட்டில் தாயாய் பிள்ளையாய் வாழ்ந்துவரும் அனைத்து தரப்பு மக்களையும் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக
செ யல்படுகின்றார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதில் ரபேல் வாட்ச் விவகாரம்இப்போது மக்களால் கூர்ந்து கவனிக்கப்படும் விசயமாகியுள்ளது. நான் தேசியவாதி, தேசபக்தன் என்று பேசுகிறார். இதற்கு முன் இவர் எங்கிருந்தார், மக்களைளெல்லாம் தேச துரோகிகள் என்று கூற வருகிறாரா? பார்ப்பனியத்துக்கு ஆதரவான அவரது செயல்பாடுகள் - பேச்சுகள் உள்ளது அதை பற்றி கவலையில்லை. அதேசமயம் மக்கள் அனைவரும் முட்டாள் என வடமாநிலத்தில் பேசப்படுவதுபோல தமிழ்நாட்டிலும் அதே பாணியில் அண்ணாமலை பேசுவது ஏற்ப்புடையது அல்ல....
சனாதானம், மதவாதம், சாதி பிரிவினை அகற்றும் வகையில் தந்தைபெரியார்-திராவிட இன ஆர்வலர்களால் நீதிகட்சி தொடங்கும் முன்னரே தமிழ்நாடு சமூகநீதி மண்ணாக, திராவிட இனத்திற்கான களமாக மாறிவிட்டது..
இதில் அண்ணாமலை போன்றவர்கள் அவிழ்த்துவிடும் பொய்மூட்டைகளையும் - உண்மைக்கு மாறான பொய்மூட்டைகளையும் இன்னும் எவ்வளவு காலத்திற்கு கேட்க முடியும்.
இப்போது அண்ணாமலைக்கு வால்பிடித்துக்கொண்டு, அரசியல் அனுபமிக்க நாராயணன் திருப்பதி தூத்துக்குடியில் பா.ஜ.கூட்டத்தில் நானே வந்து பேசுவேன் என்கிறார். சிரமமே வேண்டாம் சார் . :நீங்களாவது உங்கள் அரசியல் அனுபவத்திற்கேற்ப உள்ளது உள்ளபடி,உண்மையை மக்களிடத்தில் பேசுங்கள் சார்...
என்றார்கள்.
இவை தவிர சமூக வலைதளங்களில் பா.ஜ. அண்ணாமலையை,வழக்கம்போல் கலாத்து விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது...




Comments