தூத்துக்குடியில் கடற்சார் விளையாட்டு! கனிமொழி கருணாநிதி-கீதாஜீவன் மாணவர்களுடன் படகில் பயணம்!!
- உறியடி செய்திகள்

- Apr 26, 2023
- 1 min read
Updated: Apr 27, 2023

தூத்துக்குடியில் கடற்சாலை விளையாட்டுக்களைத் தொடங்கிவைத்து
கனிமொழி கருணாநிதி, கீதாஜீவன்
படகில் உற்சாக பயணம்!
விளையாட்டுத்துறையில் முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் திட்டங்களை மாணவர்கள் - இளைஞர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்தி பலன் அடையவும் வலியுறுத்தல்!
தி.மு.கழகத் துணைச்செயலாளர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர்கள் துணைத் தலைவர் கனிமொழி கருணாநிதி அரசியல், கவிஞர், எழுத்தாளர், பண்டைகால கலைகள் மீட்டெடுப்பு-கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாப்பு, விளையாட்டு, தந்தைபெரியார் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில் பகுத்தறிவு , பெண்கள் முன்னேற்றம் .மற்றும்கழக வளர்ச்சிப்பணிகளில் மிகுந்த ஆர்வமுடன் தி.மு.கழகத்தினரையும் ஆக்கப்பூர்வமான மக்கள்நலப்பணிகளில் தீவிரபடுத்தியும் வருகின்றார்.


இந்நிலையில் தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழா - புத்தக கண்காட்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் மாணவர்கள் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் பயன்பெறும் வகையில் மிக எளிதாக மக்களை அணுகி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் வழியில் மக்களோடு செல், மக்களோடு வாழ், மக்களுக்கான பணிகளை முன்னெடு என்கிற லட்சியத்தின் கீழ் தொடர்பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் வழிகாட்டு அறிவுறுத்தலின்படி
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் கடல்சார் பம்பர் சவாரி, பனாண சவாரி. விண்டர் சங்ஃபிங், ஸ்டே ன்ட் அப் ஆன் .போர்டு உள்ளிட்ட விளையாட்டுகள் தொடக்கவிழா முத்துநகர் கடற்கரை வளாகத்தில் தொடங்கியது.

இதில் தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டகடல்சார் விளையாட்டுகளை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து கனிமொழி கருணாநிதி- அமைச்சர் கீதாஜீவன் மாணவர்களுடன் படகில் சவாரி செய்தனர். அப்போது
தொடர்ந்து விளையாட்டு போட்டிகளிலும், விளையாட்டிலும் தயக்கங்கள், தாழ்வுமனப்பான்மையின்றி ஆர்வமுடன் பங்கேற்கவும், விளையாட்டு என்பது ஆக்கப்பூர்வமாக அறிந்து பங்கேற்றால் அது உங்கள் வாழ்வில் மாபெரும் திருப்புமுனையாகவும் அமையும்,
நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது பன்னாட்டு விளையாட்டுகளையும் தமிழ்நாட்டில் உலக நாடுகள் வியந்து மிரளும் அளவுக்கு செய்து, தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறைக்கு தேவை யான 'அனைத்து நிதி உள்ளிட்ட பிற வசதிகளையும் முதல்வர் தளபதி ஏற்படுத்தி தந்து வருகிறார். இதனை அனைவரும் பயன்படுத்தி க்கொள்ளவும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.


மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,
மாநகர ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் கலந்துகொண்டார்கள்.




Comments