கரூர் அருகே கோவிலுக்கு சீல் வைப்பு! கோட்டாட்சியர் புஷ்பா தேவிகார் மோதி மாணவி காயம்!!
- உறியடி செய்திகள்

- Jun 10, 2023
- 2 min read


வீரணம்பட்டி கோவில் திருவிழாவில் சாமி கும்பிட செல்லும் பொழுது பட்டியல் இனத்தவரை உள்ளே அனுமதிக்காததால் ஏற்பட்ட மோதலில் சமரசம் ஏற்படாத நிலையில் கோட்டாட்சியர் புஷ்பா தேவி கோவிலுக்கு பூட்டிற்கு சீல் வைத்தார், தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக கோட்டாட்சியரை பகுதி மக்கள் சிறை பிடித்தனர், போலீசார் அவரை அனுப்பி வைக்கும் பொழுது கோட்டாசியர் கார் பாவாதாரணி (17) மீது மோதி பலத்த காயம், கோட்டாட்சியரை கண்டி த்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!
இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், சமூகநீதி செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் தரப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர். ஓதுவாராகலாம் என்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தமிழகமுதல்வர் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தி வரும், திராவிட மாடல் ஆட்சியில், சாதிய பாகுபாடுகளை காரணம் காட்டிய செயல்பாடுகள் ஏற்புடையதல்ல!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலபகுதி கிராமம், வீரணம்பட்டியில் காளியம்மன் கோயில் திருவிழா கடந்த 7.ம்தேதி தொடங்கியது. 2ம் நாளான வியாழக்கிழமை பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோயிலில் சாமி கும்பிட்டபோது அவருக்கு திருநீறு தர மறுத்து உள்ளே நுழையக்கூடாது என மற்றொரு தரப்பினர் தடுத்து வெளியே அனுப்பியதாக கூறப்படுகின்றது, .

இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது, இதனால் கோயில் நிர்வாகம் கோயிலுக்கு பூட்டு போட்டது,
இதையடுத்து இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது., மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, இதையடுத்து திருவிழாவை நடத்தி கொள்ளலாம் எனவும் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்கவேண்டும், இல்லாவிடில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்படும், கோயிலுக்கு சீல் வைக்கப்படும் என்றும், கோயில் அரசு நிலத்தில் உள்ளதால் அரசே கோயில் நிலத்தை எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது,

இந்நிலையில் சம்பவத்தன்று ஒரு தரப்பினர் கோவில் பூட்டை
திறந்து உள்ளே இருந்த கரகங்களை எடுத்து நீர் நிலையில் விட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இதுகுறித்து தங்கள் தரப்புக்குதான் வெற்றி என்று ஒரு சிலர் தங்கள் வாட்ஸ்அப் க்ரூப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது, இதனைத் தொடர்ந்து
குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு வந்து கோயில் நிர்வாக தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்,

பட்டியலினத்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதற்காக கோயிலை சுற்றி குழந்தைகளுடன் பெண்கள் அமர்ந்திருந்தனர், கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் என பட்டியலினத்தவர்களும் கோயிலுக்கு வெளியே கூடி காத்திருந்தனர்,
பட்டியலினத்தவரை கோயிலுக்கு அனுமதிக்காததை அடுத்தும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமையில் வருவாய்த் துறையினர் கோயிலுக்கு சீல் வைத்தனர்.

இதையடுத்து வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதம் செய்த மக்கள் கோட்டாட்சியர் புஷ்பாதேவியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டாட்சியர் புஷ்பா தேவியை மீட்டு போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அமர வைத்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து அப்பகுதிமக்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கோட்டாட்சியரை வெளியே விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் கரூர் ஏ டி எஸ் பி மோகன் மற்றும் டி எஸ் பி ஸ்ரீதர் ஆகியோர் பொதுமக்களிடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே
கோட்டாட்சியரை பத்திரமாக போலீஸார் அனுப்பி வைத்தனர்.,

இதனை தொடர்ந்து செல்லும் பொழுது வீரணம் பட்டியைச் சேர்ந்த பாவதரணி 17 இளம் பெண் மீது கோட்டாட்சியர் கார் மோதி பலத்த காயம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் வீரணம் பட்டியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் கோவிலை திறக்கவும் கோட்டாட்சியர் மீது மோதிவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றதற்கும், சரியாக விசாரணை செய்யாமல் ஒருதலை மச்சமாக கோட்டாட்சியர் செயல்பட்டதாக குற்றம் சாட்டி திருச்சி முதல் பாளையம் செல்லும் சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், சம்பவ இடத்திற்கு வந்த, கரூர்
ஏ டி எஸ் பி மோகன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் வரமறுத்ததாகவும், தகவல்கள் கூறப்படுகின்றது.
தொடர்ந்து வீரணம்பட்டியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் கோவில் சம்பவம் குறித்து தமிழக அரசு,
உயர்மட்ட அதிகாரி மூலம்,கோவில் விவகாரம் குறித்தும்முறையான விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் அப்பகுதியில் வலுத்துள்ளது....
இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர். ஓதுவாராகலாம் என்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையேதமிழகமுதல்வர் நடைமுறைபடுத்தி வரும், திராவிட மாடல் ஆட்சியில், சாதிய பாகுபாடுகளை காரணம் காட்டிய செயல்பாடுகள் ஏற்புடையதல்ல!
குளித்தலை உட்கோட்டநடுவர், கோட்டாச்சியர், புஷ்பா தேவி தனது பொருப்புணர்ந்து இருதரப்பு மக்களிடமும், இன்னமும் கூடுதலான முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பகட்டத்திலேயே எடுத்திருந்தால், இரு தரப்பு மக்களிடையே இப்போது நிலவும் கூடுதலான இடைவெளி ஏற்படாமல். சுமூகத்தீர்வு ஏற்படுத்த முயன்றிருக்கலாம், இருதரப்பினரிடையேசட்டம் ஒழுங்கு பிரச்சனை எழுமால் தவிர்க்கும் வகையில் சரியான முறையில் தனது அணுகு முறையை தொடர்ந்திருக்கலாம் என்கிற கருத்துக்களையும் எளிதில் கடந்து செல்லவும் முடியவில்லை
ராம்ச




Comments