நெகிழ்ச்சியில் மூத்த தி.மு.க.வினர்! வீடுகளுக்கே நேரில் சென்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகள்!
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்! கழக இளைய தலைமுறையினர் மூத்த கழகத்தினரிடம் ஆலோசனை பெற்று பணியாற்றவும் அறிவுறுத்தல்!
முன்னதாக மூத்த கழகத்தினரை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நலம் விசாரித்து, தற்ப்போதைய கழகப் பணி நிர்வாகிகளிடம், தங்களையும், தங்கள் கழகப் பணிகளை அங்கீகரித்து
ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருகையால் மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றிகள் கூறியது குறிப்பிடதக்கது!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்தமிரறிஞர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட திமுக மூத்த நிர்வாகிகளுக்கு, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தலின்படி,தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர். கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், தருமபுரி மாவட்ட பொருப்பாளர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூத்த தி.மு.கழக நிர்வாகிகள் - கழகத்தினரை அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்றுப் பொற்கிழிகள் வழங்கி, உடல்நலம் விசாரித்தாார்!
அப்போது கட்சி நிர்வாகிகள் சார்பு அணியினர் மூத்த கழகத்தினர் ஆலோசனைகள், வழிகாட்டல்களை கேட்டறிந்து கழகப் பணிகளில் தீவிரம் காட்டவும் அறிவுறுத்தல்கள். ஆலோசனைகளையும் வழங்கினார்!

முன்னதாக கொத்தவாச்சேரி, தீர்த்தனகிரி,குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், ஆலப்பாக்கம், குள்ளஞ்சாவடி,கீழ்பூவாணிக் குப்பம்,வழுதலம்பட்டு,தம்பிப்பேட்டை,விருப்பாச்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கழக முன்னோடிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்து பொன்னாடை போர்த்தி பொற்கிழிகளை 51 நபர்களுக்கு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிப்பாடி தெற்கு இன்ஜினியர் வி்.சிவகுமார்,வடக்கு,ஆர்.நாராயணசாமி, கம்மாபுரம் தெற்கு,ராயர்,பொதுக்குழு உறுப்பினர் கே.பி.ஆர். பாலமுருகன்,வடலூர் நகர் மன்ற தலைவர் சிவகுமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவர் கோகிலா குமார்,வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் துணைத் தலைவர் ராமர்,குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஜெய்சங்கர்,உட்பட கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் உடன் சென்றனர்.

முன்னதாக மூத்த கழகத்தினரை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று நலம் விசாரித்து, தற்ப்போதைய கழகப் பணி நிர்வாகிகளிடம், தங்களையும், தங்கள் கழகப் பணிகளை அங்கீகரித்து
ஆலோசனைகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருகையால் மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றிகள் கூறியது குறிப்பிடதக்கது!




Comments