செந்தில்பாலாஜி நள்ளிரவு கைதும்! அப்பட்டமான மனித உரிமைகள் மீறலும்! வலுப்பெறும் குற்றச்சாட்டுகள்!!
- உறியடி செய்திகள்

- Jun 14, 2023
- 2 min read

மூத்தப் பத்திரிக்கையாளர்,மணவை எம்.எஸ்.ராஜா...
செந்தில்பாலாஜி நள்ளிரவு கைதும்! அப்பட்டமான மனித உரிமைகள் மீறலும்! வலுப்பெறும் குற்றச்சாட்டுகள்!!
சென்னையில் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் காலையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டள்ளனர். 17 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி நடைபயிற்சி சென்றுவந்த உடையுடன், யாருடனும் தொடர்பு கொள்ளவோ, எவரும் அவரை பார்க்கவோ அனுமதிக்காமல், மன உலைச்சலுக்கு ஆளாகும் வகையில் அவர்நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்ததாக பல சர்ச்சைகளுக்கு பிறகு கூரிய அமலாக்கத்துறையினர் குற்றவியல் நடைமுறை சட்டம் 41.ஏ.ன்படி, முறைகளை பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டும் வலுத்துவருகிறது.
இது பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

இந்திய தண்டனை சட்ட விதிகளின்படி பொதுவாக
விசாரணை அமைப்பு ஒருவரை கைது செய்யும்போது என்னென்ன நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதை மீறும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானவை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி ஒருவரை கைது செய்யும்போது, யார் விசாரணை அதிகாரி என்பது பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.
தான் கைது செய்யப்பட்டதை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும்.

. கைது செய்யப்படும் நபர் தன்னை பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். ஏதேனும் காயங்கள் இருந்தால் அவை பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைது செய்யும் விசாரணை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைது செய்யப்பட்ட நபருக்கு வழங்கப்பட வேண்டும்.
கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்திரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

கைதின்போதோ, விசாரணையின்போதோ மோசமாக நடத்தவோ, சித்ரவதை செய்யவோ கூடாது.
இந்திய குற்றப்பிரிவு சட்டத்தின் 46 பிரிவு துணைப்பிரிவு (4)ன்படி, நள்ளிரவில் கைது செய்யக்கூடாது.
இது எதையுமே மோடி அரசின், ஏவல் அமைப்பான அமலாக்கத்துறை கடைப்பிடிக்கவில்லை. என்று குற்றசாட்டுகின்றனர் சம்பவம் பற்றி அறிந்தவர்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை குப்பையில் போட்டிருக்கிறது அமலாக்கத்துறை.
செந்தில் பாலாஜியும் தொடர்பான விசாரணையில் அப்பட்டமாக மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது. கைது குறித்த தகவல்கள் ஆளுநருக்கோ, சபாநாயகருக்கோ தெரிவிக்கப்படவில்லை.
மோடியின் ஏவல் அமைப்புகள் கடந்த 9 ஆண்டுகளில் நடத்திய ரெய்டுகளின் முடிவுகளில் 97 சதவீதம் பேர் நிரபராதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விஷயத்திலும் பிதமர்மோடியின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறது... அத்துமீறியிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை காலில் போட்டு மிதித்திருக்கிறது. என்கின்றனர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர்.




Comments