சேவை மையம். போதை தடுப்பு மையங்கள், சமையல்உபகரணங்கள்ஸ்மார்ட்போன்கள்! அமைச்சர் கீதாஜீவன் தகவல்....
- உறியடி செய்திகள்

- Apr 18, 2023
- 3 min read


சமூகநலத்துறை மூலம் சேவை மையம், போதை தடுப்பு மையங்கள், பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் சமையல் உபகரணங்கள் வழங்குவதுடன்புதிய கட்டிடங்களும் கட்டித்தரப்படும் என்று சமூகநலத்துறைமானிய கோரிக்கையில் பேசிய அமைச்சர் கீதாஜீவன் கூறினார்...
தமிழக சட்டமன்றத்தில் சமூக நலன் - மகளீர் உரிமைத்துறை மானிய கோரிக்கை மீதான விவதாதத்திற்க்கு, பதிளித்தும், புதிய திட்ட அறிவிப்புகளை, தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாடு முதல் அமைச்சர், தளபதி மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன்,தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர். தமிழ்நாடு சமூக நலன் - மகளீர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், ஏப்.17. திங்கட்கிழமை நேற்று பதிலளித்து பேசினார்...
அப்போது அவர் பேசியதாவது.....
60 ஆண்டுகளை கடந்த தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வழியில், அனைவரையும் உள்ளடக்கிய, எல்லோருக்கும் எல்லாம் என்கிற இலக்கினை முன்னிறுத்தி திராவிட மாடல் ஆட்சியை கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியார் நடத்தி வருகின்றார்.
ஊனமுற்றோர் என்றழைக்கப்பட்டவர்கள் மனம்வருந்தவோ. தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படக்கூடாது சமூகத்தில் அவர்களும் சாதிக்க பிறந்த வர்கள் என்பதை அனைவருக்கும் நினைவூட்டி, அவர்களை மாற்றுத்திறனாளிகள் என அழைக்கச் செய்த முத்தமிழறிஞர்தலைவர் கலைஞரின் சிந்தனைகளை - கொள்கைகளை முழுமையாக உள்வாங்கிய நமது முதல் அமைச்சர் தளபதியார் மாற்றுத்திறனாளிகள் நலன், பாதுகாப்பு, வாழ்வாதாரம் காக்கும் வகையிலும் பிறரைப் போல், அரசின் நலத்திட்டங்கள், அவர்களுக்கும் கிடைக்கப்பெற்று தன்மானம், சுயமரியாதையுடன் சமஅந்தஸ்தைப் பெற்று சமூக அந்தஸ்துடன் அவர்கள் வாழவேண்டும் என்று இத்துறையின் மூலம்பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்துவதில், தாயுள்ளத்துடன் தனி கவனமும், அக்கைரையும் கொண்டு, துறையின் செயல்பாடுகளையும், வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்றுவதையும் நேரடி கண்காணிப்பு மூலம், உரிய ஆலோசனைகள் அறிவுறுத்தல்களையும் வழங்கியும் வருகின்றார்.......

கழகத் தலைவர், முதல் அமைச்சர் தளபதியாரின் மாற்று திறனாளிகள் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான இத்தகைய செயல்பாட்டினை ஊக்கப்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து முன்னேற்ற மடையச் செய்யும் முதல் மாநிலமாக, முதல்வர் தளபதியாரின் தலைமையிலான தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக தேர்வு செய்து, மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பாடுபடும் சிறந்த மாநில விருதினை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது.
இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்க்கும், தமிழர்களின் மனிதநேயம், மனிதாபிமானத்திற்கு கழக தலைவர், முதல்வர் தளபதியார் பெற்று தந்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.....


மேலும் இத்துறையின் முன்னேற்றத்திற்க்காக முதல்வர் தளபதியார் ரூ.25.70 கோடி மதிப்பீட்டில், 17.312. ஆயிரம்,அரசுப்பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரங்கள். சமூகநலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டம், புகார்க்குழுக்கள், கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரிய செயல்பாடுகளை துரிதபடுத்தி, கண்காணிக்க இணைய தள முகப்பு - செல்போன் செயலிகள் உருவாக்கப்படவுள்ளது....
6 வயது குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணித்து நிகழ்கால நேர பதிவு மேற்கொள்ள வசதியாக, 18.573,அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.17.53 கோடி செலவில் ஸ்மார்ட்ஃபோன்கள் ஒரு வழங்கபடும். முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் சத்துணவு திட்டத்தில், குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கலும் வழங்கப்படும். பாலியல் அல்லாத பிற துன்புறுத்தள்கள் - சுரண்டல்களால் பாதிக்கப்படும் இழப்பீடு வழங்க௹ 50 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு உருவாக்கப்படும் . சமூகநலத்துறை கீழ் செயல்படும், 34. அரசு குழந்தைகள் இல்லங்களிலும் ஸ்மார்ட்போர்டு. திறன் பலகைகள் அமைக்கப்படும். திருச்சி, கோவை, சென்னையில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில்
போதை தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

தூத்துக்குடி, தட்டப்பாறை சென்னை ராயபுரம் சிறுவருக்கான குழந்தைகள் இல்லங்களுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். சென்னை அரசு சிறுமியர் இல்லம். சென்னை, நெல்லை. மதுரை அரசு கூர்நோக்கு இல்லப் பணியாளர் குடியிருப்பு கட்டிடம் கட்டப்படும்.
அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தால் 1.54.108. லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருவதோடு, இத்திட்டத்தால் மாணவர்கள் வருகையும், கற்றல் திறனும் அதிகரித்து, இடைநிற்றல் தவிர்க்கப்பட்டுள்ளது.
மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் மூலம் 2.9.365 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்... உயர்கல்வி பயில முடியாத,
11.682 ஆயிரம்மாணவிகள் இத்திட்டத்தால் இந்த ஆண்டு பயனடைந்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட 29 சதவிகிதம் மாணவிகள் உயர்கல்வியில் பயனடைந்து வருகின்றார்கள்...

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1,800, மாற்றுத்திறனாளிகளுக்கு 3சக்கரவாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 6.84.639 லட்சம் மாற்றுத்திறனாளிகள் மாதந்திரஉதவியும். ரூ.68 கோடி செலவில் மாணவர்கள் - வேலைக்குச் செல்வோர் உட்பட 8 201 பேருக்கு இணைப்பு சக்கஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்இரு கால்களிலும் குறைபாடு இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், இனி ஒரு காலில் குறைபாடு இருப்பவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு..
முதற்கட்டமாக 500 பயனாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 15. மாவட்டங்களில் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 39. ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்படும். இதன்மூலம் சேவைகள் அனைத்தையும் வீட்டிலிருந்தே அவர்கள் பெறமுடியும். நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை மூலம் உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள், மருத்துவசான்றுகள், உள்பட அரசின் சேவைகள் அனைத்தும் எளிதாக பெற முடியும்.
வட்டார கிராம அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான . உரிமைகள் திட்டம் மூலம் புதிய செயலி உருவாக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார தேவை பற்றிய விவரங்கள் துல்லியமாக சேகரித்து தரவுதளம் உருவாக்கி மின்னணு நிர்வாக. முறைமேம்படுத்தப்படவும், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு, கடனுதவி, தொழிற்பயிற்சி, ரூ.29.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி வழங்கி வாழ்வாதரத்திற்கான வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா ஸ்தலங்கள். பொழுது போக்கு கட்டிடங்கள். தமிழ்நாடு அரசு இடங்கள் உள்ளாச்சி அமைப்பு அலுவலங்கள் விளையாட்டு திடல்களில்இது மாற்றுத்திறனாளிகள் சாய்வு தளபாதைகள், கழிப்பிட வசதி, மின்தூக்கி வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.....

அரசு அலுவலகங்களில் 16. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டுமனைகள், பட்டா. வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கும் முதல்வர் தளபதி உரிய நடவடிக்கை எடுத்துவருகிறார். நீலகிரி. திண்டுக்கல் மலை பிரதேச குழந்தைகள் மையங்களில் முன்பருவ கல்வி பயிலும் 9.088 குழந்தைகளுக்கு ஸ்வெட்டர.சாக்ஸ். தொப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெறப்பட்ட 3483விண்ணப்பங்களில் வருவாய்துறை, மூலம் 598 வீட்டுமனை பட்டாவும்.ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு வழங்ககோரிய 2336. விண்ணப்பங்களில்.நகர்புற வாழ்வியல்மேம்பாட்டுத்துறை மூலம் 1131 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ளவர்களுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் 1.346. ஆண் குழந்தைகளும்-4.582, பெண் குழந்தைகளும் பயன்பெற்றுள்ளனர்.

முதல்வர் தளபதியாரின் தலைமையிலானஇந்த அரசு. மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டதைவிட ரூ.500 கோடி கூடுதலாக சேர்த்து ரூ.1.106. கோடி ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.




Comments