உஷ்ஷ்ஷ்! சிரித்தா கூட குத்தமா? பா.ஜ. நிர்வாகி நடிகை குஷ்பூ டெல்லி மகளீர் ஆணையத்தில் புகார் !!
- உறியடி செய்திகள்

- Nov 5, 2022
- 1 min read

காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்பதற்கு ஏற்பதற்போதைய அரசியல் சூழலில் தி.மு.கழகத்தை விமர்சித்தே சிலர் அரசியல் செய்வதோடு தங்களின் இருப்பையும் காட்டி கொள்வதாக பலர் மூத்தபத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்கள் கூறிவருகின்றனர்....
இந்நிலையில் பா.ஜ.க.தலைவர்
அ ண்ணாமலை மலையை மிஞ்சும் அளவிற்கு பா.ஜ.க.விலுள்ள நடிகை குஷ்பூ தற்போது தி.மு.க.வினர் மீது ஒரு பூதாாகர பிரச்சனையை கிளப்பி வருகிறார்.
தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசியதா, கூறி பா.ஜ., மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பங்கேற்ற மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை சைதை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையானார்கள். தி.மு.க.வும், அமைச்சர் மனோதங்கராஜும், சாதிக்கை எச்சரித்து, அறிவுரைகள் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.......
இந்நிலையில்குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்? அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்?
அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை. அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர், சைதை சாதிக்கை தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார்.........
என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை. அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசியவர் மீதும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் புகார் அளித்துள்ளேன். என்னை பற்றி பேசிய பேச்சை மனோ தங்கராஜ் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.
சமூக வலைதளங்களில் உஷ் சிரிச்சாக்கூட குத்தமா? என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றார்கள்.....




Comments