புதுக்கோட்டை குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு! மாநகராட்சியாக்கவும் நடவடிக்கை!!அமைச்சர்.கே.என்.நேரு
- உறியடி செய்திகள்

- Jan 13, 2023
- 1 min read


புதுக்கோட்டை குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு. மாநகராட்சியாக்கிடவும் நடவடிக்கை சட்டமன்றத்தில் அமைச்சர்
கே.என்.நேரு தகவல்..
தமிழக சட்டமன்றத்தின் 2023.ம் புதிய ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடரின் தொடர்ச்சியான இன்று கேள்வி நேரத்தின் போது பதிலளிக்கப்பட்டது. இதில் தி.மு.கழக முதன்மைச்செயலாளர். தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசுகையில், மாநகராட்சியாக மாற்றுவதற்கு சுமார் 3 லட்சம் மக்கள்தொகைவே ண்டும் . தற்போது 1.68.பேர் மட்டுமே புதுக்கோட்டையில் உள்ளனர், எனவே அருகிலுள்ள திருக்கட்டளை, மேலக்காட்டூர், முள்ளுர்.நத்தம்பண்ணை, திருமலை நாயக்கன் சத்திரம் உள்ளிட்ட மேலும் சில
பேரூராட்சிகள், ஊராட்சிகளையும் இணைத்து உரிய ஆய்வுக்குப்ப பின்னர் மாநராட் சிக்குவது குறித்து தமிழ்நாடு முதல்அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். புதுக்கோட்டைக்கு குழநீர் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவந்து நீண்டகாலமாவதால், குழாய் சேதங்கள், பழுதுகள் காரணமாக குடிநீர் தடைப்பட்டது. இதனை ரூ.79.6. லட்சம் கோடி மதிப்பீட்டில் சரி செய்து உரிய பராமரிப்பு பணிகள், பழுதுபார்க்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பகுதிகளில் ஏரி, குளம் கிணறுகள் வளமாக உள்ளதால், அவற்றையும் தூர்வாரி, அவற்றின் நீரை சொறிவூட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றின் மூலம் நாள்தோறும் 12. மில்லியன் தண்ணீர் புதுக்கோட்டைக்கு கிடைக்கும்.

இது தவிர ரூ.642 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டத்திற்கான விரிவான, நடவடிக்கை விரைவாக . எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் புதுக்கோட்டைக்கு போதிய குடிநீர் அனைவருக்கும் வழங்க தனி கவனத்துடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அவர் பேசினார்......




Comments