சுழலும் முதல்வரின் சாட்டை! பல்லை பிடுங்கிய விவகாரம். போலீஸ் அதிகாரிமீது நடவடிக்கை!!
- உறியடி செய்திகள்

- Mar 30, 2023
- 2 min read

விசாரணை கைதிகளின் பல்லை உடைத்த ஏஎஸ்பி பல்பீர் சிங் சஸ்பெண்ட்..சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி.
விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 10 இளைஞர்களின் பற்களை தட்டி உடைத்து குரூர சித்ரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். விசாரணை கைதிகளின் பற்களை உடைத்த ஏஎஸ்பி பல்பீர் சிங் குறித்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, பாமக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் ஐபிஎஸ் அதிகாரி பல்பீர் சிங். இவர் அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கி குரூரமாக சித்திரவதை செய்வதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்ற நபரை அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராவை உடைத்ததாக கூறப்படும் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இவை கூடுதல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து வாலிபரின் பற்களைப் பிடுங்கி எடுத்ததாக பாதிக்கப்பட்ட வாலிபர் குற்றம் சாட்டியுள்ளார். கணவன்-மனைவி விவகாரம், சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியது மற்றும் கடன் கொடுத்த விவகாரங்களில் கைது செய்யப்பட்டவர்கள் என சிறிய விவகாரங்களில், காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் அவர்களின் பற்களைப் பிடுங்கியதாக புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள், காவல்துறையிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க ஆரம்ப பித்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்பீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்,
விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் சட்டசபையில் அறிவித்தார். சம்பவத்தைதொடர்ந்து விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.




Comments