மக்களை முட்டாளாக்கும் முயற்சி தொடருகிறதா? அண்ணாமலை,பாணியிலா சசிகலாபுஷ்பா? எழும்பும் சந்தேகங்கள்!
- உறியடி செய்திகள்

- Dec 23, 2022
- 2 min read

அண்ணாமலை பாணியில் சர்ச்சைகளை திசைதிருப்ப முயற்கிறா? சசிகலா புஷ்பா ? அரசியல் இருப்பு சுயநல நாடகமா? வலுக்கும் சந்தேகங்களும், எழும்பும் கேள்விகளும்!
தி.மு.கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, முதல்வரின் தலைமையில், அமைச்சர்களும்,தீவிரமக்கள்நலப்பணி திட்டங்களைதனிகவனத்துடன்செயல்படுத்தி வருகின்றனர்......
தி.மு.கழக அரசு தமிழகத்தில் ஆட்சி பொருப்பையேற்றதிலிருந்து. பா.ஜ. தலைவர் அண்ணாமலை பல்வேறு ஆதாரமற்ற, அறிவுப்பூர்வமற்ற குற்றச்சாட்டுகளை போகிறபோக்கில் வாய் புளித்ததோ, மங்காய் புளித்ததோ என்கிற பாணியில், தந்தைமைக்கேல் பட்டி பள்ளி மாணவி மரணத்தில் தொடங்கி, கோவை கார் வெடிப்பு சம்பவம் வரை வாய்ச் சொல்லில் வீரராக குற்றச்சாட்டுகளையும், அவதூரு பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தவர், சமீபத்தில், ரபேல் வாட்ச் விவகாரத்தில் வழக்கமான தன் பேச்சு திறமையால், தமிழ்நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் பேசி எங்கப்பன் குறுதுக்குள்ளே என்கிற கிராம வழக்கு மொழிக்கேற்ப, தற்பபோது கடும் விமர்சனத்திற்கு, அரசியல் நோக்கர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளார்.
அண்ணாமலையால், தொடர்ந்து சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்தாமல், நோஇன்கம், ஒன்லி அவுட்கோயிங் என்பதை போல, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பார்க்கப்படுவதாக கூறுகின்றனர் விபரமறிந்தவர்கள்......

இந்நிலையில் அண்ணாமலை சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள முக்கிய விசயமாக ரபேல் வாட்ச் விவகாரம் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில், அதிமுகவிலிருந்து, சமீபத்தில்,பா.ஜ.வுக்கு மாறிய சசிகலா புஷ்பாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார், மற்றும் கதவு,சன்னகள்உடைத்துநொருக்கப்பட்ட தாக, ஒரு சர்ச்சையை, தூத்துக்குடியில் பேசும் பொருளாக்கப்பட்டுள்ளது.
ரபேல் வாட்ச் விவகாரம் சூடுபிடித்து உச்சநிலையில், சர்ச்சையாகிவருகிற நிலையில், தூத்துக்குடியில்தூத்துக்குடி பி & டி காலனி 8 வது தெருவில், சசிகலா புஷ்பா வீடு உள்ளது. சில தினங்களுக்கு முன்னர்,சசிகலா புஷ்பவின் வீடு கார் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரின், ஆச்சரியத்தைக்குள்ளாக்கி, கவனத்தையும் ஈர்த்துள்ளதுஎன்றேகூறப்படுகின்றது....
சசிகலா புஷ்பாவின் வாழ்க்கையில் அரசியலில் 2009 முதல் அதிமுகவில் படிப்படியாக வளர்ச்சியடைந்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அதிமுகவில் கட்சியிலோ ஆட்சியிலோ பதவியில் இருந்தவர்கள் வாயை திறக்காமல் அமைதியாக இருந்தார்கள். குடித்து விட்டு உளறிய சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பாவை மகளிரணி பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா!.
தொடர்சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பாவை போயஸ்கார்டனுக்கு அழைத்து ரெய்டும் விட்டார் ஜெயலலிதா!. ஆனாலும் அசராத சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் ஜெயலலிதாவிற்குஎதிராக,பேசிபரபரப்பை ஏற்படுத்தினார். இதற்குஅவருக்கு பின்னால் இருந்த பலமான பின்னணியே காரணம் என்றும் கூறப்பட்டது.......
.
ஊடகவெளிச்சத்திற்காகவும்,விளம்பரத்திற்காகவும், கடந்த காலங்களில், அதிமுக,வில் ஜெ.தன்னைதாக்கியதாக, ராஜ்யசபாவில், குற்றம்சாட்டி பாதுகாப்பு கோரியதும்,அதன் பின் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், நடந்த பல்வேறுமுன்னுக்குப்பின்முரணான சம்பவங்களும், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில்கடும் சர்ச்சைக்குள்ளான நிலையில், சசிகலா புஷ்பாவின் - வீடு தாக்குதல்சம்பவம்பல்வேறுசந்தேகங்களையேஇதில்ஏற்படுத்துவதாகவும்,கூறப்படுகின்றது......

பா.ஜ. தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரத்தை திசைத்திருப்பும் திருப்பும் முயற்சியாக இத்தகைய சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கலாம் என்றும், இதன்மூலம்அரசியலில்தங்களின்இருப்பை தக்கவைத்து பாது காத்துக் கொள்ள பா.ஜ.க.வினர்முயலவும்வாய்ப்புள்ளதாக வும், சங்பரிவார அமைப்புகளின் கடந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது....
1949, ஆம் ஆண்டு அக்.2.ம் ந் தேதி மகாத்துமா காந்தியை, சுட்டு கொன்றுவிட்டு, இதற்கு காரணமாவன் முஸ்லீம் என்பதை போல நம்புவைக்க முயன்ற நாதாராம்கோட்சே காலம் முதல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் யாரால் நடத்தப்பட்டது, இதன் பழியார்மீது சுமத்தப்பட்து, பகிரங்கமாக சட்டத்திற்க்கு எதிராக, பாபர்மசூதி, இடிக்கப்பட்டதும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் மூலம், சமூக செயல்பாட்டாளர். ஸ்டேசன் சாமி உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்டதேசதுரோக வழக்குகள் , புனையப்பட்டவை கள் என்பதிலிருந்தே, ஒன்றியஅரசால்சட்டம்.ஒழுங்குபடும்பாடுகள், கவலைக்குறியதாகவேத பார்க்கவேண்டியுள்ளது.. இந்நிலையில் தமிழ்நாட்டில், நேற்று வரை, கர்நாடாகவில் போலீசாகயிருந்த அண்ணாமலை பா.ஜ. தலைவரானவுடன், அடுக்கடுக்கான ஆதாரமற்ற, அறிவுப்பூர்வமற்ற வகையில் பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்பதிலிருந்தும் , அரசியல் முதிர்ச்சி அனுபவம் பெற்ற , முக்கிய தலைவர்கள், தமிழகபா.ஜ.க.வில் ஒரங்கட்டப்பட்டுவதையும், வைத்தே அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..
கடந்த குறுகிய காலத்தில், சென்னை, கும்பகோணம், கோவை, தென்காசி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குறிபார்த்து பா.ஜ. நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு, தாக்குதல் சம்பவங்கள்.போன்ற தம்பி கட்டுகிற கதைகளை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வந்தால் இதில் இயல்பாக எழும் சந்தேகங்கள்களையும் நியாயத்தையும் எளிதில் புறம்தள்ளிவிடவும் முடியாது.....
கோவையில் சில தினங்களுக்கு முன்நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அண்ணாமலை.திமுகவிற்கு முடிவு கட்ட இந்த தலைமுறையால் முடியும். 2024 இல் திமுகவிற்கு முடிவுரை எழுதப்படும். மக்கள் மனசு பாஜக பக்கம் திரும்பிவிட்டது. சூழ்நிலைகளை ஓட்டாக்க வேண்டும். 2024 இன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் பெரும். 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிட்டால், திமுக நடை பிணமாக தான் ஆட்சி நடத்துவார்கள். ஆட்சியை எப்படி பிடிப்பது. எங்கு பொறி வைத்தால் எந்த எலி வரும் என்பது எங்களுக்கு தெரியும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என அண்ணாமலை பேசியதையும் நினைவில்கொள்ள வேண்டியுள்ளது......
இப்போது மிகப்பெரிய சர்ச்சையில் வலியண்டராக வாயை கொடுத்து மாட்டிக் கொண்டு, தொடர்ந்து புழுகு மூட்டைகளை அவிழ்க்கும், முயற்சியில் அண்ணாமலை பாணியில், தற்போது சசிகலா புஷ்பவும் தூத்துக்குடியில் தன் அரசியல் இருப்பை காட்டிக்கொள்ளுவதுடன்,தக்கவைத்துக்கொள்ளும் வகையிலும்,......
அதேசமயம் அண்ணாமலை பேசிய ரபேல் வாட்ச் விவகாரத்தையும் - .....
இந்திய எல்லையில் சீனாவுடனான மோதலையும் திசைதிருப்பும் முயற்சியாக, சசிகலா வீடு, கார் தாக்குதல் சம்பவத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. என்கின்றனர், விசயமறிந்த, அரசியல் பார்வையாளர்கள் நடுநிலையாளர்களின் கருத்தாகவும் உள்ளது,....




Comments