திருப்பூரில் கோடைகாலதண்ணீர் பந்தல்! செல்வராஜ் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்!!
- உறியடி செய்திகள்

- Apr 30, 2023
- 1 min read

திருப்பூரில் கோடைகாலதண்ணீர் பந்தல். சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கிவைத்து, இளநீர், பழங்கள், நீர் மோர் வழங்கினார்...
இன்று ஏப்.30. ஞாயிற்றுக்கிழமை
மக்கள் நலன் காக்கும், திராவிட மாடல்கழக ஆட்சியை முன்னெடுத்துவரும்,தமிழ்நாட்டின்முதலமைச்சர், தி.மு.கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி
கோடை கடும் வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், ஒரு மாதத்திற்க்கு திருப்பூர் வடக்கு மாவட்டம் தெற்கு மாநகரம் 36-வது வார்டில் மாமன்றஉறுப்பினர் அலுவலகம் முன்பு கோடைகால நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தாகம் தீர்க்கும் பழ வகைகளை இளநீர் போன்றவற்றை திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
தெற்கு மாநகர செயலாளர மு.நாகராசன், மாவட்ட துணை செயலாளர் டிஜிட்டல் சேகர், பகுதி கழக செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி ஐயப்பன், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.




Comments