செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை! விசாரணைக்கு வரும் வழக்கு! கடந்துவந்த பாதை! முதல்வர் கண்டனம்!
- உறியடி செய்திகள்

- Jun 14, 2023
- 6 min read

ஜூன், 14. 2.30.pm.
செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலையில், தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கையில் கைதுக்கு முந்தைய பின்பற்ற வே ண்டிய நடைமுறைகள் பின்பற்றவில்லை!
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரத்த குழாய் அடைப்பு! சரி செய்ய அறுவை சிகிச்சை! பரிந்துறைத்த இ.எஸ்.ஐ. மருத்துவ வல்லுநர்கள்!
சென்னை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணையா!
சர்ச்சைக்குரிய வழக்கு கடந்துவந்த பாதை!
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.2014-ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனினும், முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை.இதையடுத்து, பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சேர்க்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மைத்துனர் கார்த்திக், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே, செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.இதையடுத்து, அமலாக்கத்துறையின் சம்மனை நிறுத்திவைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றுஆணையிட்டது!
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு என 3 மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறையும்,பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்குகளில் கடந்த மே 16-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து அறிக்கை அளிக்க தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர்.வழக்கு விசாரணையைப் பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலையில், தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
உள்ளாட்சி கவுன்சிலர் முதல் கைது வரை... யார் இந்த அமைச்சர் செந்தில்பாலாஜி!
1996 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக முதல் முதலாக மக்கள் பிரதிநிதியானார்.
கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர் வே. செந்தில்குமார் என்னும் செந்தில் பாலாஜி. எண் கணிதம், ராசிபலன்களின் மீது நம்பிக்கை கொண்ட அவர் தனது பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டார். தொடக்கக் கல்வியினை ராமேஸ்வரப்பட்டியிலும், மேல்நிலை கல்வியை கரூரில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
அதன் பின்னர் கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை படித்தார். அரசியல் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக 1995ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு மதிமுகவில் இணைந்தார். சிறிது காலத்திலேயே மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்னர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வார்டு கவுன்சிலராக முதல் முதலாக மக்கள் பிரதிநிதியானார்.
அதன் பிறகு செந்தில்பாலாஜி, 2006ம் ஆண்டு கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
துடிப்பாக செயல்பட்டதன் காரணமாக கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் என அடுத்தடுத்த பொறுப்புகளை ஜெயலலிதா அவருக்கு வழங்கினார்.
திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை உள்ளிட்ட விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டதால் , ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பட்டியலில் செந்தில் பாலாஜி இடம் பெற்றார்.
இதனையடுத்து 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரை போக்குவரத்து துறை அமைச்சராக ஜெயலலிதா நியமித்தார். 2015 ம் ஆண்டு முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், அவரது அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி ஆகியவற்றை ஜெயலலிதா பறித்தார்.
2016ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அரவக்குறிச்சி தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக அதிமுக பிரிந்து சட்ட போராட்டம் நடத்தி வந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலில் செந்தில் பாலாஜியும் தகுதி நீக்கம் செய்யபட்டார்.
டிடிவி தினகரனுடன் துவங்கிய அமமுகவில் கரூர் மாவட்ட செயலாளராகவும், அமமுக மாநில அமைப்பு செயலாளராகவும் செயல்பட்ட செந்தில்பாலாஜி , பின்னர் திமுகவில் 2019ம் ஆண்டு இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செந்தில் பாலாஜிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சார துறை ஆகியவை வழங்கப்பட்டது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிரான தீவிர அரசியலில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வந்த நிலையில் , 2015 ஆம் ஆண்டு அதிமுக அமைச்சராக போக்குவரத்து துறையில் இருந்தபோது நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தற்பொழுது அமலாக்க துறையினர் அவரை கைது செய்துள்ளதாக கடும் சர்ச்சைகளுக்கிடையே இ.டி.யால் அறிவிக்கப்பட்டுள்ளது!
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரர் வீடுகளிலும் அமலாக்கத்துறை தலைமை செயலகத்திலும் சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமன விவகாரம் குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அந்த சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கையை அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைதொடர்ந்து கடந்த மாதம் இறுதி வாரத்தில் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, கோவையில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, தமிழக அரசு ஒப்பந்ததாரரான கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அவரது சசோதரர் அசோக்குமார் வீடு மற்றும் அவரது நண்பரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரக்கு வாகன ஒப்பந்ததாரரான சச்சிதானந்தம் வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று சோதனை நடத்தினர்.

சென்னையில் பசுமை வழிசாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, பிஷப்கார்டன் பகுதியில் உள்ள சகோதரர் அசோக் குமார் வீடுகளிலும் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தமிழ்நாடு அரசின் தலைமை செயலாகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனையில் பெரிய அளவில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் வங்கி கணக்குகள், வங்கி பண பரிவர்த்தனை கணக்குகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் கட்சியினர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்
தமிழ்நாடு அரசின் தலைமை செயலாகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு நேற்று மதியம் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய துணை பாதுகாப்பு படை வீரர்களுடன் சோதனை நடத்த வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து தமிழக காவல்துறை, இது எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை செயலகம் எனவே, மத்திய துணை பாதுகாப்பு படை வீரர்களை எங்களால் அனுமதிக்க முடியாது. வேண்டும் என்றால் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறோம் என்று கூறி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை தடுத்து நிறுத்தினர்.
பிறகு வேறு வழியின்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் அறையில் சோதனை செய்துவிட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் தலைமை செயலாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயுதங்களுடன் அதிதீவிர படை வீரர்கள் குவிந்ததால் பரபரப்பு
சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் நேற்று காலை முதல் மதியம் வரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தான் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். பின்னர் பிற்பகலுக்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு ஆயுதங்களுடன் அதிதீவிர படை வீரர்கள் 20 க்கும் மேற்பட்டோர்குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை
காரணம் எதுவும் சொல்லாமல் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்"
கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை
உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாரிடமும் அதிகாரிகள் எதையும் சொல்லவில்லை
காலை 7 மணி முதல், மறுநாள் அதிகாலை 2 மணி வரை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வழக்கறிஞர் கூறினார்!
.
.
மருத்துவமனையில் கூடுதல் போலீசார் குவிப்பு :
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் கூடுதல் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குவிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் இருந்து கண்காணித்து வருகிறார்
செந்தில் பாலாஜியால் பேச முடியவில்லை, காத்திருந்து அனுமதி வாங்கிய பின் நேரில் சந்தித்தேன்
செந்தில் பாலாஜியின் சிகிச்சை பெறும் அறை துணை ராணுவப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது - என்றுஅமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒமந்து ரார் மருத்துவமனைக்கு நேரில் வந்துஅமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நலம் குறித்து விசாரித்தார். அமைச்சர்கள் துரைமுருகன். கே.என்.நேரு, கீதாஜீவன், வெள்ளைக்கோவில் சாமிநாதன், சேகர்பாபு.எ.வ.வேலு, உள்ளிட்ட அமைச்சகர்கள் உடன் சென்றனர்.
முன்னதாகஸ்டாலின் தொடர் ஆலோசனை!
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் நடைபெற்ற கூட்டத்தில்எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா
அமைச்சர்கள் துரைமுருகன் கே.என்.நேரு சட்டவல்லுநர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
_
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது எதிரொலி கரூரின் பல்வேறு இடங்களில் போலீசார்!
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் உத்தவிட்டுள்ளதாகவும், செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் பயன்படுத்தி வரும் கரூர் ராமகிருஷ்ணாபுர அலுவலகத்தை நேற்றிரவு அமைக்கத்துறையினர் சீல் வைத்து தடைசெய்த பகுதி என அறிவித்துள்ளனர்.!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளது
இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி - அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள்.
இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன்.
நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது.
விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.
நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா?
அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது.
என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.
எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா, தங்களுக்கு எவ்வித தகவலும் கூறாதநிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதாக,என்று ஆட்கொணர்வு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில்
இந்நிலையில், திமுக, தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்து தி.மு.க சார்பில்தொடரப்பட்ட வழக்கு, இன்று மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தகவல் தெரிவுத்துள்ளதாக நீதிமன்ற வளாகத்திலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றது.
குற்றவியல் சட்டம், 41. ஏ.ன்படி எவ்விதமான தகவலும் சொல்லாமல் 18 மணிநேர விசாரணைக்கு உடனிருந்து ஒத்துழைத்த செந்தில் பாலாஜிக்கு உடல்ரீதியாக துன்புறுத்தலையும் கைதுக்கு முந்தைய பின்பற்ற வேண்டிய நடைமுறை
யும் பின்தொடராமல்அமலாக்கத்துறை மனஏற்படுத்தியதுடன் கைதும் செய்துள்ளதாக கூறுவது,அப்பட்டமான மனித உரிமை மீறல் செயலிலும் ஈடுப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது!

மேலும் நேற்று அவரை சந்திக்க, வழக்கறிஞரை கூட அனுமதிக்கவில்லை என திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அனுமதிக்கு பின்னர் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகின்றது!
இந்நிலையில் ஓமந்துரார் மருத்துவமனை சார்பில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உரிய அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஒன்றிய அரசின், இ.எஸ்.ஐ. மருத்துவர்கள், 4. பேரும் ஆய்வு செய்தபின்னர், உறுதிபடுத்தி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளதும் குறிப்பிடதக்கது!
சற்றுமுன் தலைமை நீதிபதி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஒப்புதல் அளித்த நிலையில், வழக்கு விசாரணை இரு நீதிபதிகளில், நீதிபதி சக்திவேல் வடக்கிலிருந்து விலகியுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் கூறுகின்றன!
இதனையடுத்து இன்று விரைவாக இருதரப்பு வழக்குகளும் விசாரணை வரவும் வாய்ப்பு!
லெமூரியன்




Comments