டி.ஆர்.பாலூ ஆவேசம்!அண்ணாமலைமீது கிரிமினல் வழக்கு! சும்மாவிடமாட்டேன்!!
- உறியடி செய்திகள்

- May 3, 2023
- 1 min read

பா.ஜ. அண்ணாமலைமீது கிரிமினல் வழக்கு. 8ந்தேதி தொடரப்படும். டி.ஆர்.பாலூபேட்டி.....
சென்னை,பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டல குழுத் தலைவர் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் தனியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தி.மு.கழக பொருளாளர், நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர் குழுத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடுசிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ.
கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் பணியாற்றுவது குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பின்னர்....
தி.மு.கழக பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு . நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் ஆகாய நடைமேம்பாலம் 5-ந்தேதி தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மீது அவதூறு பரப்பும் வகையில் சொத்து சேர்த்ததாக கூறி உள்ளார்.
21 கம்பெனிகள் என்னுடையது என்று கூறி உள்ளார். அதில் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. நான் தேர்தலில் நிற்கும் போதே எனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளேன். என் மீது அவதூறு பரப்பிய அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளேன். அவரை சும்மா விடமாட்டேன். வருகிற 8-ந்தேதி அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு டி.ஆர்.பாலூ கூறினார்.




Comments