தமிழக வேளாண் பட்ஜெட்! உழவர்களின் தேவைகேற்ற நுணுக்கமான பட்ஜெட்!! நடிகர் கார்த்தி பாராட்டு - வரவேற்பு!
- உறியடி செய்திகள்

- Mar 23, 2023
- 1 min read


தமிழ்நாடு 2023,வேளாண் பட்ஜெட் - உழவர்கள், விவசாயம் சார்ந்தவர்கள், விவசாய உற்பத்தி. பாரம்பரிய பயிர்வகைகள் கலப்பற்ற விவரம் அறிந்து, துணுக்கமாக தயாரிக்க தேவைதேற்ற சிறந்த பட்ஜெட், நடிகர் கார்த்தி பாராட்டு
:

வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சி.
சாமை, வரகு, குதிரைவாலி, போன்றவைகளை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணர்களும் குறைவாக இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறு, குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.
வேளாண் பட்ஜெட் குறித்து உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனரும் நடிகருமான கார்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் வெகுவாக பாராட்டியுள்ளார்.




Comments