தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! திருச்செந்தூர் கோவில் விழா பணி!! அமைச்சர்கள் அதிரடி ஆய்வு!!!
- உறியடி செய்திகள்

- Oct 27, 2022
- 1 min read

தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, அமைச்சர்கள் திருச்செந்தூர் கோவிலில் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.....
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் கடந்த 24-ம் ந்தேதி தொடங்கி வருகிற 30-ம் ந் தேதி வரை விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரஹம் ஹாரமும், திருக்கல்யாண வைபோகமும் நடைபெறுகிறது. இதனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்காணபக்தர்கள் - பொதுமக்கள் பெரும்திரளாக வருகை தருவது வழக்கம்..............

தி.மு.கழகத் தலைவர்,தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி சென்னை கிழக்கு மாவட்டதி.மு கழக செயலாளர், தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆய்வுப் பணியில் ஈடுப்பட்டனர். .........
அப்போது அங்கு நடைபெறும் பிரசித்தி பெற்ற விழா முக்கிய நிகழ்வுகளான, சூரஹம் ஹாரம்.திருக்கல்யாண விழாக்களில்கலந்துகொள்ள வருகை தருகின்ற, பக்தர்கள், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை, அத்தியாவச தேவைகளையும், வசதிகளையும் தடங்களின்றி ஏற்படுத்தி தரும் பொருட்டு பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.............

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்தில் பங்கதர்கள் தங்க தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள், கழிவறை வசதிகள், குடிநீர், மருத்துவமையங்கள், மின்சார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுவாமி தரிசணம் செய்ய ஏதுவான, இலகுவான வரிசைமுறைகள், மூத்த குடிமக்களுக்கான விரைவு தரிசன ஏற்பாடுகள் மற்றும் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், சூரஹம் ஹார விழா நடைபெறும் கடற்கரை பகுதிகளில் செய்யபட்டுள்ள, வசதி, முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள் குறித்தும் தீவிர ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு, அதுகுறித்த விபரங்களையும் கேட்டறிந்தனர்..........

தற்காலிக கூடாரங்களில் தங்கி விரதங்களில் மேற்கொள்ளும் பக்தர்கள் முன் ஏற்பாடு வசதிகள் குறித்தும் கோவில் நிர்வாகத்துடன் ஆய்வு செய்து, உரியவழிகாட்டு, ஆலோசனைகள், அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள்.
ஆய்வின்போது, இந்துசமய அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர், எஸ்.பி. அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிகள் உடன் சென்றனர்.
அதன்பின் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர்கள், சேகர்பாபு. அனிதராதாகிருஷ்ணன் தங்கத் தேரை இழுத்தும் வழிபாடு செய்தனர்.........
மணவை, எம்.எஸ்.ராஜா...




Comments