தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!அதிகார திமிரில், ஆர்.என்.ரவி உளறுவதா? சீமான் கடும் கண்டனம்!
- உறியடி செய்திகள்

- Apr 7, 2023
- 1 min read

அதிகாரத்திமிரில், தன்னெழுச்சியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? தனது ஆணவப்பேச்சை ஆளுநர் ஆர்.என். ரவி இத்தோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவார்கள்! – சீமான் எச்சரிக்கை....
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
|நாம் தமிழர் கட்சி
வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தொல் தேசிய இனத்தின் மக்களான தமிழர்களை பணத்தை வாங்கிக்கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பது அபத்தத்தின் உச்சமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
இங்கிலாந்து வாழ் இந்தியக் குடிமகனான அனில் அகர்வால் எனும் தனிப்பெரும் முதலாளிக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை நாட்டு நலனுக்கு எதிரானதாகக் கற்பிக்க முனையும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாதம் கடும் கண்டனத்திற்குரியது.




Comments